Traffic Police ஆக மாறிய வான்கோழி..! (வீடியோ)

14 February 2020, 7:43 pm
Turkey Traffic Police - updatenews360
Quick Share

எல்லாருக்கும் எல்லாமே தெரிந்து விடாது. ஒரு சிலர் ஆறறிவோடு செயல்படுவர், ஒரு சிலர் அதற்கு மேலோங்கி இருப்பர்.

இந்த வீடியோவில் ஒரு உயிரினம் மனிதருக்கு நிகராக ஒரு வேலையை செய்துள்ளது. ஆம், தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற வான்கோழி கூட்டங்கள், எப்படி கடக்குது என்று பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

பரபரப்பாக வாகனம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து வெளியே வான் கோழி கூட்டம் கூட்டமாக வந்தது. வாகனங்கள் செல்லும் பாதை என்பதால், அதில் ஒரு வான் கோழி நடுரோட்டில் நின்றது. இதைப்பார்த்த வாகன ஓட்டிகள் நின்றனர்.

தனது கூட்டம் சாலையை கடந்த பிறகே அந்த வான் கோழி வாகனங்களுக்கு வழி விட்டு சென்றது. இந்த ஐந்தறிவு ஜீவன்களா இப்படி செய்கிறது என மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.