தொடர்ந்து 14 முறை நிராகரித்த உபெர் டிரைவர்கள்..! கண் தெரியாத பெண்ணுக்கு ஒரு மில்லியன் டாலர் இழப்பீடு வழங்கிய நீதிமன்றம்..!

4 April 2021, 3:13 pm
Uber_UpdateNews360
Quick Share

டாக்ஸி சேவைகளை வழங்கும் தளமான உபெர் நிறுவனம் கண் தெரியாத ஒரு பெண்ணான லிசா இர்விங் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் 14 முறை உபெரில் புக் செய்தும் ஓட்டுநர்கள் தனது வழிகாட்டி நாயுடன் சவாரி எடுக்க மறுத்துவிட்டனர் என்று குற்றம் சாட்டி தொடரப்பட்ட வழக்கில் அமெரிக்காவில் லிசா இர்விங் மற்றும் அவரது நாய் வென்றுள்ளார்.

இர்விங்கின் கூற்றுப்படி, அவர் வேலை, பிறந்தநாள் கொண்டாட்டம், கிறிஸ்துமஸ் ஈவ் தேவாலய சேவைகளை முடித்து விட்டு திரும்பும்போது, உபெர் நிறுவனத்தில் 14 முறை புக் செய்தும் அனைவரும் லிசா இர்விங் மற்றும் அவரது வழிகாட்டி நாயையும் சவாரி எடுக்க மறுத்துவிட்டனர். இதனால் அந்த பெண் தனது நாயுடன் இருட்டில், மழையில் சிக்கி அவதிப்பட்டுள்ளார்.

பார்வையற்றோர் மற்றும் அவர்களின் வழிகாட்டி நாய்க்கு பாகுபாடு காட்டியதற்காக 2014’ஆம் ஆண்டில் உபெர் மீது வழக்குத் தொடரப்பட்டது. மேலும் 2016’ஆம் ஆண்டில் 2.6 மில்லியன் அமெரிக்க டாலர் செலுத்த ஒப்புக்கொண்டது.

எனினும் தற்போது இர்விங்கிற்கு நிறுவனம் கூடுதலாக 1.1 மில்லியன் அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இர்விங்கின் கூற்றுப்படி, அவர் உபர் டிரைவர்களால் குறைந்தது 60 முறை நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

“ஊனமுற்ற தன் மீது பாகுபாடு காட்டிய ஓட்டுனர்களை ஒழுக்கமின்றி தொடர்ந்து வாகனம் ஓட்ட உபெர் அனுமதித்தது.” என்று வழக்கை விசாரித்த நீதிபதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“உபேர் ஒரு விசாரணையை நடத்தியபோது, சில சந்தர்ப்பங்களில், சவாரி மறுப்புகளுக்கான பாகுபாடற்ற காரணங்களைக் கண்டறிய ஓட்டுநர்களைப் பயிற்றுவிப்பதற்காக அதன் புலனாய்வாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது, சில சமயங்களில் பாகுபாடு புகார்கள் இருந்தபோதிலும் ஓட்டுநர்களை தொடர்ந்து செயல்படவும் அனுமதி அளித்துள்ளது.” என நீதிபதி மேலும் கூறினார் .

இர்விங்கிற்கு மொத்தம் 3,24,000 அமெரிக்க டாலர் இழப்பீடு கிடைக்கும். அதே நேரத்தில் 8,05,313 அமெரிக்க டாலர் வழக்கறிஞர் கட்டணம் உட்பட சட்ட செலவுகளையும் உபெர் செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றதை அடுத்து, வழிகாட்டி நாய்கள் போன்ற சேவை விலங்குகளுடனான சிக்கல்களுக்காக உபெர் இப்போது ஒரு பிரத்யேக கொள்கையைக் கொண்டுள்ளது என்று அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Views: - 0

0

0

Leave a Reply