மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா தொற்று..! பிரிட்டனில் மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்த திட்டம்..!

31 October 2020, 7:12 pm
Borris_Johnson_Rishi_Sunak_UpdateNews360
Quick Share

கொரோனா வைரஸ் பாதிப்புகள் அரசின் கணிப்புகளை விட வேகமாக பரவுகிறது என்று விஞ்ஞானிகள் எச்சரித்ததை அடுத்து, பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த வாரம் இங்கிலாந்தில் ஒரு புதிய தேசிய ஊரடங்கை அமல்படுத்த பரிசீலித்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தொற்றுநோய் பிரிட்டனின் பெரும்பாலான பகுதிகளில் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. பிரிட்டனில் கொரோனா பாதிப்பால் டஜர்போது வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 46,299 ஆகும். ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் இறப்புகளின் எண்ணிக்கையில் பிரிட்டன் தான் முதலிடத்தில் உள்ளது.

புதிய ஊரடங்கு நடவடிக்கைகளை அறிவிக்க போரிஸ் ஜான்சன் வரும் திங்களன்று ஒரு செய்தி மாநாட்டை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அத்தியாவசிய கடைகள் மற்றும் பள்ளிகள், நர்சரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மட்டுமே திறந்த நிலையில் இருக்க அனுமதிக்கும் என்று பிரிட்டன் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் புதிய நடவடிக்கைகள் இன்னும் விவாதத்தில் உள்ளன என்றும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கத்தின் மூத்த வட்டாரத்தை மேற்கோள் காட்டி ஒரு ஊடக அறிக்கை கூறியுள்ளது.

தற்போது, இங்கிலாந்தில் உள்ள உள்ளூர் பகுதிகளுக்கு மூன்று அடுக்கு கட்டுப்பாடுகளை அரசாங்கம் கொண்டுள்ளது. நிலை 3 மிக உயர்ந்தது. ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகியவை தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் தங்கள் சொந்த கொள்கைகளை செயல்படுத்தி வருகின்றன.

Views: - 19

0

0

1 thought on “மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா தொற்று..! பிரிட்டனில் மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்த திட்டம்..!

Comments are closed.