பேரனுக்கு ரூ.200க்கு சாப்பாடு வாங்கிய தாத்தா! ரூ.2 லட்சம் பார்க்கிங் கட்டணம் கட்டிய பரிதாபம்

28 February 2021, 8:34 am
Quick Share

பேரன் பசிக்கிறது என கூற, மெக்டொனால்டு உணவகத்தில் 200 ரூபாய்க்கு சாப்பாடு வாங்க சென்ற தாத்தா, இலவச பார்க்கிங் நேரம் போக கூடுதலாக 17 நிமிடங்கள் எடுத்து கொண்டதால், பார்க்கிங் கட்டணமாக ரூ.2 லட்சம் கட்டி உள்ளார். ஐயோ பாவம்..!!

அமெரிக்க, இங்கிலாந்து நாடுகளில் மெக்டொனால்டு உணவகம் மிகவும் பிரபலம். அங்கு சாப்பிடுவதற்காகவே நீண்ட தொலைவில் இருந்து வந்து சாப்பிட்டு விட்டு செல்வர். ஆனால் அங்கு பேரனுக்கு சாப்பாடு வாங்கி தந்த தாத்தா ஒருவருக்கு, அன்றைய தினம் மகிழ்ச்சியான தினமாக அமையவில்லை. அதிக நேரம் பார்க்கிங் செய்ததால், அவருக்கு பார்க்கிங் கட்டணம் மட்டும் 2 லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டிருக்கிறது.

பிரிட்டனில் உள்ள லூட்டன் பகுதியில் வசிப்பவர் ஜான் பேபேஜ் (வயது 75). இவர் தனது பேரன் டெய்லருக்கு சாப்பாடு வாங்கி தர, தனது காரில் மெக்டொனால்டு சென்று ‘ஹேப்பி மீல்ஸ்’ வாங்கி தந்திருக்கிறார். இந்த உணவின் இந்திய மதிப்பு ரூ.200 மட்டுமே. பேரன் சாப்பிட்டதும், அருகில் இருக்கும் பார்க்கில் சென்று தனது நண்பர்களுடன் விளையாட, விரும்பியிருக்கிறான். தாத்தாவும் அனுமதி அளித்துவிட, விளையாட சென்று விட்டான் டெய்லர். தாத்தா அவனுக்காக காரின் உள்ளேயே காத்திருந்திருக்கிறார்.

விளையாடி முடித்துவிட்டு பேரன் திரும்பி வர, காரை எடுத்து வீட்டிற்கு சென்றுவிட்டார் பேபேஜ். அவரது பார்க்கிங் நேரம் சரிபார்க்க, 2 மணி நேரம் 17 நிமிடம் பார்க்கிங் செய்திருக்கிறார் தாத்தா. மெக்டொனால்டு உணவகத்தை பொறுத்தவரை, பார்க்கிங் செய்த முதல் 2 மணி நேரம் இலவசம். அதற்கு பின் நேரம் அதிகமானால் கட்டணம் வசூலிக்கப்படும். இதனையடுத்து அவருக்கு 400 டாலர் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனை அவரது வீட்டின் முகவரிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

அவரது துரதிர்ஷ்டம், அவர் தற்போது அந்த வீட்டில் வசிக்கவில்லை. புதியவீட்டை கண்டுபிடித்த கடன் வசூலிக்கும் அதிகாரிகள், 400 டாலர் அபராதத்துடன், காஸ்ட்டாக கூடுதலாக 1,651 டாலர் கட்டும்படி தாத்தாவிற்கு பில் கொடுத்துள்ளனர். இதன் இந்திய மதிப்பு 2 லட்சம் ரூபாய்! தாத்தாவும், பாட்டியும் இந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லையாம்.

Views: - 22

0

0