டிக்டாக் செயலி மீதான தடையை திரும்ப பெற்றது அமெரிக்கா: பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜோ பைடன் உத்தரவு..!!

10 June 2021, 4:03 pm
Quick Share

வாஷிங்டன்: சீனாவின் 8 செயலிகள் மீதான தடையை திரும்பப்பெற்றதாக அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

சீனாவின் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதித்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து டிக்டாக் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் அமெரிக்க கோர்ட்டில் இன்னும் நிலுவையில் உள்ளன.

Joe_Biden_UpdateNews360

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்கும் முந்தைய நிர்வாகத்தின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்கும் முடிவை ஜோ பைடன் நிர்வாகம் தற்போது கைவிட்டு விட்டது.

டிக்டாக், வி சாட் மட்டுமின்றி சீனாவின் 8 செயலிகள் மீதான தடையையும் திரும்ப பெற்றுள்ளது.

Views: - 172

0

0