ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வெள்ளம் : 180ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!!

18 July 2021, 6:02 pm
Belgiul Floods- Updatenews360
Quick Share

கனமழை காரணமாக ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பா நாடுகளான ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் கனமழை பெய்து வந்தது . வரலாறு காணாத மழை நின்றுவிட்ட நிலையில் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஜெர்மனியின் ரைன்லேண்டு பகுதியில் மட்டும் 110 பேர் இறந்துள்ளதாகவும் இந்நாட்டின் மற்ற பகுதிகளிலும் அண்டை நாடுகளிலும் 70 பேர் இறந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மனியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அந்நாட்டு தலைவர் ஏஞ்சலா மெர்க்கல் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் திடீரென பெய்த பெருமழைக்கு பருவநிலை மாற்ற பிரச்னைதான் காரணம் என சூழலியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 164

0

0