மீண்டும் அணுகுண்டு சோதனை..? அதிர வைக்கும் அமெரிக்க அரசு..!

23 May 2020, 8:17 pm
Trump_UpdateNews360 (2)
Quick Share

1992’க்கு பிறகு அதன் முதல் அணுசக்தி சோதனை வெடிப்பை நடத்தலாமா என்று டிரம்ப் நிர்வாகம் கடந்த வாரம் விவாதித்ததாக வாஷிங்டன் போஸ்ட் ஒரு மூத்த அதிகாரி மற்றும் இரண்டு முன்னாள் அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவும் சீனாவும் குறைந்த திறன் கொண்ட அணுசக்தி சோதனைகளை நடத்துகின்றன என்ற நிர்வாகத்தின் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னர், உயர்மட்ட தேசிய பாதுகாப்பு அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த அதிகாரிகளின் கூட்டத்தில் இந்த குறித்து விவாதிக்கப்பட்டது என்று வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

எனினும், அணுசக்தி சோதனை நடத்துவதற்கான எந்தவொரு முடிவும் அந்த கூட்டத்தில் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ரஷ்யா மற்றும் சீனா முன்வைக்கும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக மற்ற நடவடிக்கைகளை எடுக்கவும், சோதனை மீண்டும் தொடங்குவதைத் தவிர்க்கவும் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் எந்த கருதும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

Leave a Reply