அமெரிக்க அதிபர் தேர்தலில் திடீர் திருப்பம்..! வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜோ பிடேன்

19 August 2020, 9:57 am
Joe_Biden_UpdateNews360
Quick Share

வாஷிங்டன்: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடேன், ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

உலகின் பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் தேர்தல் என்பது மற்ற நாடுகள் உற்று பார்க்கும் ஒரு முக்கிய நிகழ்வாகும். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அதிபர் தேர்தல் அமெரிக்காவில் நவம்பர் 3ம் தேதி நடைபெறுகிறது.

தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் களம் இறங்குகிறார். ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பிடனும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

இந் நிலையில் வேட்பாளராக போட்டியிட ஜோ பிடேனை, ஜனநாயக கட்சி தேர்வு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது குறித்து ஜோ பிடன் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:

ஜனாதிபதி வேட்பாளராக ஜனநாயகக் கட்சியின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வது எனது வாழ்க்கைக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக  அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் மாநாடு, ஆன்லைன் மூலம் நடைபெற்றது.

அதில் தான் ஜோ பிடன் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மாநாட்டில் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா, டிரம்பை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0 View

0

0