பொருளாதாரத் தடை மற்றும் 10 உயர்மட்ட தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்..! ரஷ்யா மீது அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அமெரிக்கா..!

15 April 2021, 9:52 pm
Joe_Biden_UpdateNews360
Quick Share

ரஷ்யாவின் அமெரிக்க தேர்தல் தலையீடு, பெரிய அளவிலான இணைய தாக்குதல் மற்றும் பிற விரோத நடவடிக்கைகள் என்று ரஷ்யா மீது கூறிய குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக அமெரிக்கா இன்று ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதோடு, ரஷ்யாவின் 10 உயர்மட்ட தூதரக அதிகாரிகளையும் வெளியேற்றியுள்ளது.

ரஷ்ய அரசாங்க கடனில் அமெரிக்க வங்கிகள் வர்த்தகம் செய்வதற்கான கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தவும், உளவாளிகள் எனக் கூறப்படும் 10 தூதரக அதிகாரிகளை வெளியேற்றவும், 2020 ஜனாதிபதித் தேர்தலில் தலையிட முயன்றதாகக் கூறப்படும் 32 நபர்கள் மீது பொருளாதாரத் தடைகளையும் விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடென் உத்தரவிட்டார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பிடெனின் நிறைவேற்று ஆணை “அமெரிக்கா மீதான அதன் சீர்குலைக்கும் சர்வதேச நடவடிக்கையைத் தொடர்ந்தால் அல்லது விரிவாக்கினால் ரஷ்யாவின் மீது ஒரு மூலோபாய மற்றும் பொருளாதார ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் இருக்கும் என்பதற்கான சமிக்ஞையை இது அனுப்புகிறது” என்று வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டொனால்ட் ட்ரம்பின் வேட்புமனுவுக்கு ஆதரவாக, ரஷ்ய புலனாய்வு அமைப்புகள் 2016 மற்றும் 2020 ஜனாதிபதித் தேர்தல்களின் போது தொடர்ச்சியான தவறான தகவல்கள் மற்றும் மோசமான தந்திர பிரச்சாரங்களை மேற்கொண்டன என்ற குற்றச்சாட்டை இது குறிப்பிடுகிறது.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் மற்றும் கூட்டாளர்களுக்கு எதிரான தீங்கிழைக்கும் இணைய நடவடிக்கைகளுக்கு பொருளாதாரத் தடைகள் மூலம் பதிலளிப்பதாக வெள்ளை மாளிகை கூறியது.

ரஷ்யாவின் அதிருப்தியாளர்களையும் பத்திரிகையாளர்களையும் குறிவைத்து அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதையும் இந்த அறிக்கை குறிப்பிட்டது.

கூடுதலாக, கருவூலத் திணைக்களம், ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகியவற்றுடன் சேர்ந்து, உக்ரேனில் கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமித்ததோடு தொடர்புடைய எட்டு நபர்களையும் நிறுவனங்களையும் தடைப்பட்டியலில் சேர்த்துள்ளது.

பிரஸ்ஸல்ஸில், நேட்டோ இராணுவக் கூட்டணி, அமெரிக்க நட்பு நாடுகள் “ரஷ்யாவின் ஸ்திரமின்மைக்குரிய நடவடிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கான நடவடிக்கைகளை இன்று அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கு ஆதரவளித்து ஒற்றுமையுடன் நிற்கின்றன” என்று அறிக்கையில் மேலும் கூறப்பட்டுளளது.

Views: - 37

0

0