அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சகோதரர் திடீர் மரணம்…! வெள்ளை மாளிகை சொன்ன காரணம்

16 August 2020, 12:32 pm
Quick Share

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சகோதரர் உடல்நலக்குறைவால் காலமானார்.

அதிபர் ட்ரம்பின்  சகோதரர் பெயர் ராபர்ட் டிரம்ப் . வயது 71. தொழிலதிபராக உள்ளார். உடல்நிலை பாதிப்பால் நியூயார்க்கில்  உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்திருப்பதாக மருத்துவக் குழுவினர் வெள்ளை மாளிகைக்கு தகவல் அனுப்பினர். இதையடுத்து, 2 நாட்கள் முன்பு மருத்துவமனையில் உள்ள தமது சகோதரரை, டிரம்ப் நேரில் வந்து பார்த்து சென்றார்.

இந் நிலையில் அவர் இறந்துவிட்டார் என்று வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ளது.

சகோதரர் மறைவுக்கு அதிபர் டொனால்டு டிரம்பும் இரங்கல் வெளியிட்டுள்ளார். அவர் தமது செய்தியில், ராபர்ட் எனது சகோதரர் என்பதை விட சிறந்த நண்பர் என்று உருக்கமாக கூறி உள்ளார்.

அவரது மறைவு எனக்கு மிகவும் கடினமான ஒன்று, தனக்கு வேண்டியது எதையும் என்னிடம் அவர் கேட்டு பெறவில்லை என்று நினைவு கூர்ந்துள்ளார்.

Views: - 1

0

0