அமெரிக்க அதிபரானார் ஜோ பைடன்: மின்னல் வேக உத்தரவுகளில் கையெழுத்து..!!

21 January 2021, 9:18 am
biden sign - updatenews360
Quick Share

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் முதல் நாளிலேயே மின்னல் வேகத்தில் ஆணைகளை பிறப்பித்து கையெழுத்திட்டார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிசும் பதவியேற்றுக் கொண்டனர். இதற்குமுன் எந்த அமெரிக்க அதிபரும் பதவியேற்ற முதல் நாளில் கையெழுத்திட்ட ஆணைகளின் எண்ணிக்கையைவிட பைடன் கையெழுத்திட்ட ஆணைகளின் எண்ணிக்கை அதிகம்.

ஜோ பைடன் பதவியேற்ற முதல் நாளில் கையெழுத்திட்ட நிர்வாக ஆணைகள் 15. அதிபரின் குறிப்புகள் என்று பொருள்படும் பிரசிடென்ஷியல் மெமோக்கள் -2. பதவியேற்ற முதல் நாளில் டிரம்ப் 8 உத்தரவுகளில் கையெழுத்திட்டார். ஒபாமா 9 உத்தரவுகளில் கையெழுத்திட்டார். ஜார்ஜ் டபிள்யூ புஷ் 2 உத்தரவுகளிலும், கிளிண்டன் 3 உத்தரவுகளிலும் கையெழுத்திட்டனர்.

ஜோ பைடன் கையெழுத்திட்ட மின்னல் வேக உத்தரவுகள், பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா சேருவது தொடர்பாகவும், அமெரிக்க மக்கள் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக முகக் கவசம் அணிவது அவசியம் என்பது தொடர்பாகவும் அவர் உத்தரவுகளைப் பிறப்பித்தார். இவையே அவரது முதல் உத்தரவுகளில் முக்கியமானவை.

டிரம்ப் காலத்தின் கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டுவரும் விஷயத்தில் தாம் தாமதம் காட்டப் போவதில்லை என்பதும், கொரோனா உலகத் தொற்று காரணமாக அமெரிக்கா வரலாற்றுச் சிக்கலில் இருக்கும் நிலையில் வேகமாக முடிவெடுக்கவேண்டியதாக புதிய அதிபர் பதவி இருக்கும் என்பதும் இந்த உத்தரவுகளில் தெரிகிறது.

Views: - 0

0

0