சீனா இராணுவ நிறுவனங்களில் முதலீடு செய்ய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தடை விதிப்பு…!!

13 November 2020, 9:15 am
us-president-trumph-updatenews360
Quick Share

வாஷிங்டன்: சீன இராணுவத்திற்கு சொந்தமான அல்லது அதற்கு கட்டுப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்ய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

சீன இராணுவத்திற்கு சொந்தமான அல்லது அதற்கு கட்டுப்பட்ட நிறுவனங்களில் அமெரிக்க முதலீடுகளை தடைசெய்யும் உத்தரவை டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டு இருந்தது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு சீனா மீது அழுத்தத்தை அதிகரித்து உள்ளது.

அமெரிக்காவின் இந்த உத்தரவு சீனாவின் தொலைதொடர்பு நிறுவனங்களான சீனா டெலிகாம் கார்ப் லிமிடெட், சீனா மொபைல் லிமிடெட் மற்றும் கண்காணிப்பு உபகரணங்கள் தயாரிப்பாளர் ஹிக்விஷன் உள்ளிட்ட சீனாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் சிலவற்றை பாதிக்கலாம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீன இராணுவத்தின் ஆதரவுடன் பாதுகாப்புத் துறையால் நியமிக்கப்பட்ட 31 சீன நிறுவனங்களின் பங்குகளை அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு தடுப்பதற்காக இந்த நடவடிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு ஜனவரி 11 முதல் அமல்படுத்தப்பட்டு, அந்த நிறுவனங்களின் பங்குகளை அமெரிக்க முதலீட்டாளர்கள் வாங்குவதை தடை செய்யும். நிறுவனங்களில் உரிமையை மாற்றுவதற்காக செய்யப்படும் பரிவர்த்தனைகள் நவம்பர் 11, 2021 வரை அனுமதிக்கப்படும் என உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Views: - 20

0

0