“ஈரான் அணுஆயுதங்களைப் பெற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்”..! அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் அதிரடி..!

27 August 2020, 10:01 am
Kamala_Harris_UpdateNews360
Quick Share

ஈரான் அணு ஆயுதங்களைப் பெற அமெரிக்கா அனுமதிக்காது என்று ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்தார். தங்களுக்கு வாக்களித்தால், ஈரானுடனான ஒபாமா கால அணுசக்தி ஒப்பந்தத்தை வலுப்படுத்த ஜோ பிடென் நிர்வாகம் நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படும் என்று வலியுறுத்தினார்.

இந்த விஷயத்தில் டிரம்ப் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்த கமலா ஹாரிஸ், “அந்த அணுசக்தி ஒப்பந்தம், நாம் அனைவரும் அறிந்தபடி, ஈரானின் அணு ஆயுதத்திற்கான பாதைகளைத் தடுத்தது. அந்த ஒப்பந்தம் சிறப்பாக செயல்பட்டதை சர்வதேச ஆய்வாளர்கள் மற்றும் அமெரிக்க உளவுத்துறையால் சரிபார்க்கப்பட்டது.

ஆனால் டொனால்ட் டிரம்ப் அதிலிருந்து விலகினார். அதை விட சிறந்த ஒப்பந்தம் போடுவதாக ஈரானுக்கு உறுதியளித்தார். ஆனால் அதற்கு பதிலாக ஈரான் தனது அணுசக்தி நடவடிக்கைகளை புதுப்பித்து மேலும் ஆத்திரமூட்டுகிறது.” எனக் கூறினார்.

“நான் தெளிவாக இருக்கிறேன். ஈரானை அணு ஆயுதம் பெற எந்த காலத்திலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவு இருப்பதை நாங்கள் தொடர்ந்து உறுதி செய்வோம்” என்று அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபரான கமலா ஹாரிஸ் கூறினார்.

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடன், ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவதைத் தடுக்க துணை அதிபராக இருந்தபோது எடுத்த வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கைகளையும் கமலா ஹாரிஸ் விவரித்தார்.

“ஒபாமா-பிடன் நிர்வாகம் பலதரப்பட்ட பொருளாதாரத் தடைகளை முடக்குவதாக விவரித்தது. இது ஈரானை பேச்சுவார்த்தைக்கு கொண்டு வந்தது. இது ஜே.சி.பி.ஓ.ஏ’க்கு வழி வகுத்தது மற்றும் அணு ஆயுத ஈரானைத் தடுத்தது.” என்று அவர் கூறினார்.

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் என்று பொதுவாக அறியப்படும் ஜே.சி.பி.ஓ.ஏஅல்லது கூட்டு விரிவான செயல் திட்டம் ஒபாமா காலத்தில் கையெழுத்தானது. பின்னர் அமெரிக்க அதிபராக வந்த டொனால்ட் டிரம்ப் ஜே.சி.பி.ஓ.ஏவிலிருந்து விலகினார்.

ஹவுஸ் புலனாய்வுக் குழுவில் பணியாற்றும் கலிபோர்னியாவைச் சேர்ந்த முதல் கால செனட்டரான ஹாரிஸ், அமெரிக்கா தனது நட்பு நாடுகளிடமிருந்து முன்னெப்போதையும் விட தனிமைப்படுத்தப்பட்டதாக தான் நம்புவதாகக் கூறினார்.

Views: - 30

0

0