சொல்றவங்க சொன்னாத்தான் கேக்குறாங்க – குட்டி யானையின் செயலை பார்த்து நொந்த தாய் யானை

7 March 2021, 4:47 pm
Quick Share

குட்டித் தூக்கம் போட்ட குட்டி யானையை எழுப்ப முயன்று தோற்ற தாய் யானையின் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

குட்டி யானை தொடர்பான வீடியோக்கள், எப்போதும் இணையவெளியில் பெரும் வைரலாகி வரும் நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் இந்த யானை குறித்த வீடியோவும் நெட்டிசன்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றன.
செக் குடியரசு நாட்டின் பிராக் நகரத்தில் உள்ள உயிரியல் பூங்காவில், குட்டித்தூக்கம் போட்ட யானையை, எழுப்ப முயன்று தோற்ற தாய் யானை குறித்த வீடியோவை, இந்திய வனத்துறை அதிகாரி ரமேஷ் பாண்டே, தனது டுவி்டடர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

நாள் முழுவதும் நன்கு விளையாடியதால் அசதியுற்ற குட்டி யானை, அந்த இடத்திலேயே உறங்கிவிட்டது. அது உறங்கி வெகுநேரம் ஆகிவிட்டதால், தாய் யானை அதை எழுப்ப முயன்றது. ஆனால், குட்டி யானை எழுந்தபாடில்லை. எவ்வளவோ முயற்சி செய்தும், தாய் யானையால், குட்டி யானையை எழுப்ப முடியவில்லை.

பின் தாய் யானை, வனவிலங்கு காப்பாளர்களிடம் இதுகுறித்து முறையிட்டு, அவர்களின் உதவியால், குட்டி யானையை உறக்கத்தில் இருந்து எழுப்பியது. பின் விழித்துக் கொண்ட யானை, தாய் யானையுடன் துள்ளிக்குதித்தபடி விளையாடியவாறே சென்றது. இந்த வீடியோ, தற்போது நெட்டிசன்களால் வைரல் ஆக்கப்பட்டு வருகின்றன.

இந்த வீடியோ, தற்போது வரை 1 மில்லியனுக்கும் மேற்பட்ட முறை பார்வை இடப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருத்துகளையும், ரிப்ளைகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 10

0

0