அம்மாடியோவ்.. ஜஸ்ட் மிஸ்! எவ்வளவு பெரிய திமிங்கலம்! வைரல் வீடியோ

17 April 2021, 8:08 am
Quick Share

ஜப்பானில் உள்ள கடல் பகுதியில், நீந்திச் சென்ற இருவரை உரசி சென்ற திமிங்கலம் ஒன்று, கடலில் இருந்து எம்பி குதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நீர் விளையாட்டுகளில் ஈடுபடும் போது உங்களுக்கு எப்போதாவது ஒரு பயங்கரமான அனுபவம் நடந்தது உண்டா? வேகமாக பரவி விடும் திமிங்கலத்தின் இந்த வைரல் வீடியோ, கடலுக்குள் நீங்கள் செல்ல நினைக்கும் முன் உங்களை ஒருமுறைக்கு இருமுறை சிந்திக்க வைக்கும். இந்த வீடியோவில், திமிங்கலம் கிட்டத்தட்ட அதே நீரில் நீந்தி செல்லும் இருவர் மீது உரசி செல்வதை காட்டுகிறது. இந்த சம்பவம் ஜப்பானின் ஒகினாவா தீவுக்கு அருகே நடந்துள்ளது.

பேட்ரிக் டேவிஸ் என்ற புகைப்படக் கலைஞரால் முதுகெலும்பை ஜில்லிட வைக்கும் இந்த காட்சிகள் நீருக்கடியில் எடுக்கப்பட்டிருக்கிறது. அவர் தனது காதலியுடன் சேர்ந்து கடலில், ஸ்நோர்கெலிங்கில் இருந்தார். அவர்களிடமிருந்து சில அடி தூரத்தில் திமிங்கலம் தோன்றியபோது, இந்த ஜோடி தங்கள் படகின் அருகே நீந்திக் கொண்டிருந்தது.
40 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவில், ஸ்நோர்கெலர்களிடமிருந்து சில அடி தூரத்தில் தோன்றும் திமிங்கலம், வானில் பாய்ந்து, கிட்டத்தட்ட அவர்கள் மீது இறங்குவதைக் காணலாம்.

இதுபோன்ற மற்றொரு திமிங்கல வீடியோ, சமீபத்தில் சமூக ஊடக தளங்களில் வைரலாக பரவியது. ட்ரோன் கேமராவில் படம்பிடிக்கப்பட்ட இந்த காட்சிகளில், ஈடன் திமிங்கலம் உணவுக்காக தனது வாயை திறந்து வைத்திருக்கிறது. மீன்களை பிடிப்பதற்காக இது, தனித்துவமான உத்தியை கடைபிடித்திருக்கிறது. பிபிசி ஆவணப்படமான ‘ஏ பெர்பெக்ட் பிளானட்டின்’ இந்த கிளிப் 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Views: - 29

0

0