எந்த எல்லைக்கும் செல்ல நாங்கள் தயார் : ராணுவத்தினருக்கு ரஷ்ய அதிபர் போட்ட அதிரடி உத்தரவு.. பரபரப்பில் மேற்கு நாடுகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2022, 1:03 pm
Russia Putin - Updatenews360
Quick Share

ரஷிய அதிபர் புதின் உத்தரவின்பேரில் கடந்த மார்ச் 24-ம் தேதியன்று உக்ரைனில் தொடங்கிய போரானது, முடிவு ஏதும் எட்டப்படாமல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உக்ரைனும் தாக்குப்பிடித்து ரஷியாவை எதிர்கொண்டு வருகிறது. இந்தநிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ராணுவத்தை அணிதிரட்டல் தொடர்பான கோப்புகளை கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ராணுவத்தை அணி திரட்டலை அறிவித்தார். மேற்கு எல்லை கடந்துவிட்டது. ரஷியாவை பலவீனப்படுத்தவும், பிரிக்கவும், அழிக்கவும் மேற்கு நாடுகள் முடிவு எடுத்துள்ளது.

தங்கள் சொந்த எதிர்காலத்தை தீர்மானிக்க வீரர்களுக்கு ஆதரவு வழங்கப்படும். ரஷியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் எந்த எல்லைக்கும் செல்ல நாங்கள் தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 919

0

0