‘சந்தேகம் வேண்டாம்’ நாம்தான் வெற்றியாளர்: அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் ஜோ பைடன் உறுதி..!!

6 November 2020, 8:47 am
Joe_Biden_UpdateNews360
Quick Share

அமெரிக்க அதிபர் தேர்தலில் நாம்தான் வெற்றியாளர் என அறிவிக்கப்படுவோம் , சந்தேகமே வேண்டாம் என ஆதரவாளர்களுக்கு ஜோ படைன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் நிச்சயம் தோற்கடிக்கப்படுவார் எனவும் நாம்தான் வெற்றியாளர் என விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்பதில் தனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை என்று அதிபர் தேர்தலில் முன்னிலையில் உள்ள ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

donald_trump_joe_biden_updatenews360

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், வாக்கு எண்ணிக்கை முடியும் போது நானும், கமலா ஹாரிசும் வெற்றியாளர்கள் என அறிவிக்கப்படுவார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என ஜோ பைடன் தெரிவித்துள்ளளார்.

அதிபர் தேர்தலில் மொத்தம் உள்ள 538 தேர்தல்சபை வாக்குகளில் 270 வாக்குகளை பெற்றவர்தான், அமெரிக்க ஜனாதிபதி பதவியில் அமர்ந்து அதிகாரம் செலுத்த முடியும். வாக்குப்பதிவு முடிந்த உடனேயே ஓட்டு எண்ணிக்கை தொடங்கி விட்டது. ஜோ பைடன் 253 வாக்குகளையும், டிரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளனர். பென்சில்வேனியா உள்ளிட்ட முக்கிய மாகாணங்களிலும் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெறுவோம் என ஜனநாயக கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Views: - 19

0

0