பாரிஸை உலுக்கிய வெடிச்சத்தம்..! கதிகலங்கிய மக்கள்..! தீவிரவாதத் தாக்குதலா..?
30 September 2020, 6:16 pmஒலியை விட அதிக வேகத்தில் செல்லும் போர் விமானத்தின் சோனிக் சத்தம் இன்று பிரெஞ்சு தலைநகர் பாரிஸ் மற்றும் அருகிலுள்ள புறநகர்ப் பகுதிகள் வழியாக எதிரொலித்தது என்று பாரிஸ் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
நகரம் முழுவதும் கேட்கப்பட்ட மற்றும் ஜன்னல்களை அசைத்த இந்த சத்தம், கடந்த வாரம் நையாண்டி வார இதழான சார்லி ஹெப்டோவின் முன்னாள் அலுவலகங்களுக்கு வெளியே கத்தித் தாக்குதலுக்குப் பின்னர், இந்த சத்தம் திடீரெனக் கேட்டதால் தீவிரவாதத் தாக்குதலோ என பாரிஸ் மக்களை பயத்தில் ஆழ்ந்தனர்.
ஆனால் பாரிஸ் போலீசார் பயன் கொள்ளும் அளவிற்கு எதுவும் இல்லை எனவும் மக்களை அமைதியாக இருக்கும்படியும் அறிவுறுத்தினர்.
“பாரிஸிலும் அதை ஒட்டிய புறநகர்ப் பகுதிகளிலும் மிக அதிக சத்தம் கேட்டது. இது ஒரு வெடிப்பு அல்ல. இது ஒலித் தடையைத் தாண்டிய வேகத்தில் செல்லும் ஒரு போர் ஜெட்” என்று பாரிஸ் போலீசார் தங்கள் ட்விட்டர் கணக்கில் தெரிவித்தனர். மேலும் இதற்காக யாரும் அவசர தொலைபேசி எண்களை அழைப்பதை நிறுத்துமாறு மக்களை வலியுறுத்தினர்.
இதற்கிடையே பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், இன்று பாரிஸ் முழுவதும் கேட்கப்பட்ட ஒலி ஒரு ரஃபேல் போர் விமானத்திற்கு உதவியாகச் சென்ற மற்றொரு விமானத்தால் ஏற்பட்டது என்றார். ஒலியின் வேகத்தை விஞ்சி செல்ல ஜெட் விமானத்திற்கு முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது என செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
0
0