உலக நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகம்..! மோடிக்கு நன்றி சொன்ன உலக சுகாதார அமைப்பு..!

27 September 2020, 1:59 pm
modi_unga_updatenews360
Quick Share

கொரோனாவை எதிர்த்துப் போராடும் நாடுகளுக்கு இந்தியா தனது தடுப்பூசி உற்பத்தித் திறனைப் பயன்படுத்தும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழியை உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பாராட்டியுள்ளார். பொதுவான நன்மைக்காக வளங்களைத் திரட்டுவதன் மூலம் மட்டுமே தொற்றுநோயைத் தோற்கடிக்க முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

நேற்று ஐ.நா பொதுச் சபையின் 75’வது அமர்வில் உரையாற்றிய மோடி, “உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடு என்ற வகையில், இன்று உலக சமூகத்திற்கு மேலும் ஒரு உறுதிமொழியை வழங்க விரும்புகிறேன். இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோக திறன் இந்த நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு அனைத்து மனிதர்களுக்கும் உதவும்.” எனத் தெரிவித்துள்ளார்

பொங்கி எழும் இந்த தொற்றுநோய்களின் மிகக் கடினமான காலங்களில் கூட, இந்தியாவின் மருந்துத் துறை 150’க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை அனுப்பியுள்ளது என்றார்.

“ஒற்றுமைக்கான உங்கள் உறுதிப்பாட்டிற்கு நன்றி. நம் நலன்களையும் வளங்களையும் கூட்டாக பொது நன்மைக்காக அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே கொரோனா  தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.” என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் கெப்ரேயஸ் ஒரு ட்வீட்டில் தெரிவித்தார்.

193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா பொதுச் சபையில் மோடி, இந்தியாவிலும், அண்டை நாடுகளிலும், 3’ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுடன் நாம் முன்னேறி வருகிறோம் என்று கூறினார். தடுப்பூசிகளை வழங்குவதற்கான அனைத்து நாடுகளின் விநியோகம் மற்றும் சேமிப்பு திறனை மேம்படுத்தவும் இந்தியா உதவும் என்று மோடி மேலும் உறுதியளித்தார்.

எனினும், இதுவரை உலகில் 32 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்த தொற்றுநோயை எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிபலிப்பை அவர் கேள்வி எழுப்பினார்.

“விரைவில் ஒரு மில்லியன் இறப்புகளின் கடுமையான மைல்கல்லை எட்டும் நிலையில் கடந்த 8 முதல் 9 மாதங்களாக, உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வருகிறது. தொற்றுநோய்க்கு எதிரான இந்த கூட்டுப் போராட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபை எங்கே? அதன் பயனுள்ள பதில் எங்கே?” என்றார் மோடி.

இந்நிலையில், உலக நாடுகளுக்கு தடுப்பூசியை தராயிரித்து வழங்க தயாராக இருப்பதாக வெளியான மோடியின் இந்த அறிவிப்புக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் கெப்ரேயஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

Views: - 7

0

0