11 நாடுகளுக்கான விசா காலவரையறையின்றி ரத்து..! ஐக்கிய அரபு எமிரேட்ஸின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன..?

19 November 2020, 3:48 pm
Dubai_UpdateNews360
Quick Share

பாகிஸ்தான்,துருக்கி, ஈரான், ஈராக், சோமாலியா, ஏமன், சிரியா, லிபியா, கென்யா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பார்வையாளர் விசாக்களை தற்காலிகமாக நிறுத்துவதற்கான ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்கத்தின் முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஜாஹித் ஹபீஸ் சௌத்ரி இதற்கு அளித்த பதிலில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முடிவு கொரோனாவின் இரண்டாவது அலை தொடர்பானது என்று நம்பப்படுகிறது எனக் கூறியுள்ளார்.

ஒரு அறிக்கையில், சௌத்ரி, “பாகிஸ்தான் உட்பட 12 நாடுகளுக்கு அடுத்த அறிவிப்பு வரும் வரை புதிய வருகை விசாக்களை வழங்குவதை ஐக்கிய அரபு அமீரகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.” எனக் கூறினார்.

இது தொடர்பாக பாகிஸ்தான் அரசாங்கம் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்பாட்டை நாடுகிறது என்று அவர் மேலும் கூறினார். ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்களில் இடைநீக்கம் பொருந்தாது என்று வெளியுறவு அலுவலகம் மேலும் தெளிவுபடுத்தியது.

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமான நிறுவனமான எமிரேட்ஸ், ஜூன் 3’ஆம் தேதி பாகிஸ்தானில் இருந்து பயணிகள் சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது.

ஜூலை மாதத்தில் விமான நிறுவனம் தனது சேவைகளை மீண்டும் தொடங்கியது.

பின்னர் ஆகஸ்ட் மாதத்தில், கொரோனா பரவுவதால் குவைத்தின் விமானப் போக்குவரத்து நிறுவனம் பாகிஸ்தானுக்கும் மற்ற 30 நாடுகளுக்கும் வணிக ரீதியான விமானங்களைத் தடைசெய்தது.

முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முடிவு அதன் தங்க விசா முறையை விரிவுபடுத்துவதாக அறிவித்த சில நாட்களில் இந்த பார்வையாளர் விசா ரத்து அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தங்க விசா நடைமுறையின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒருவர் 10 ஆண்டு காலம் வாழ அனுமதி வழங்கப்படுகிறது.

ஒரு அறிக்கையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தலைவரும், துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், முனைவர் பட்டம் பெற்றவர்கள், செயற்கை நுண்ணறிவு, மருத்துவ அறிஞர்கள் மற்றும் கணினி, மின்னணுவியல், நிரலாக்க, மின் மற்றும் உயிரி தொழில்நுட்ப பொறியாளர்கள் அனைவரும் தங்க விசா பெற தகுதியானர்வர்கள் என அறிவித்துள்ளார்.

Views: - 0

0

0

1 thought on “11 நாடுகளுக்கான விசா காலவரையறையின்றி ரத்து..! ஐக்கிய அரபு எமிரேட்ஸின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன..?

Comments are closed.