அமெரிக்காவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத் தீ: ஏராளமான பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்..!!

21 July 2021, 3:48 pm
Quick Share

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் உள்ள காடுகளில் வேகமாக பரவும் காட்

அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் உள்ள காடுகளில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, ப்ரீமாண்ட்-வினேமா தேசிய காட்டில் போர்ட்லாந்திலிருந்து தென்கிழக்கில் 300 மைல்கள் வரை கடந்த ஒரு வாரமாக நீடிக்கும் காட்டுத் தீ பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

latest tamil news

இதேபோல் கலிபோர்னியா மாகாணத்திலும் காட்டுத் தீ ஏற்பட்டு உள்ளது. பல கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை மூட்டம் ஏற்பட்டு உள்ளது. காட்டுத் தீ மேலும் பரவும் பட்சத்தில் அதைக் கட்டுப்படுத்தும் வகையில் மீட்டு படையினரிடம் உதவி கேட்கப்பட்டு உள்ளது.

ஆர்கன்சாஸ், நெவாடா, அலாஸ்கா ஆகிய மாகாணங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

latest tamil news

காட்டுத் தீ ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு அருகில் 2,000 வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், மேலும் 5,000 வீடுகள் அபாயத்தில் உள்ளன. ஏற்கனவே, 70 வீடுகள் மற்றும் 100 கட்டடங்கள் தீயில் சிக்கி சேதமடைந்துள்ளன. இதுவரை காட்டுத்தீ பரவலால் உயிர் சேதம் எதுவும் நிகழவில்லை எனக் கூறப்படுகிறது.

Views: - 72

0

0