பாத்ரூம் கண்ணாடிக்கு பின்னால் இருந்த வசந்த மாளிகை! அதிர்ச்சியில் அம்மணி
7 March 2021, 5:02 pmநியூயார்க் நகர பெண் ஒருவர் தன் வீட்டின் குளியலறை கண்ணாடியின் பின்னால் ஒரு முழு அப்பார்ட்மென்ட் இருப்பதை கண்டுபிடித்தார். இதுதொடர்பாக டிக்டாக்கில் அவர் வெளியிட்ட வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது.
நியூயார்க் நகரத்தில் வசித்து வருபவர் சமந்தா ஹாட்சோ. இவர் ஒரு லாப நோக்கமற்ற நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் வசிக்கும் வீட்டின் குளியல் அறையில் ஜன்னல் கதவுகள் இல்லாத நிலையில், குளிர்ந்த காற்று வந்திருக்கிறது. அது எப்படி வருகிறது என கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார்.
இதுதொடர்பாக அவர் டிக்டாக்கில் வெளியிட்ட முதல் வீடியோவில், காற்றில் தன் தலைமுடி பறப்பதை காட்டுகிறார். பின் அது எங்கிருந்து வருகிறது என பார்த்த போது, குளியலறை கண்ணாடியின் பின்னால் இருந்து வருவது தெரிகிறது.
பின் கண்ணாடியை அவர் நகர்த்தி பார்க்கும் போது, கண்ணாடியின் பின்னால், ஒரு இருண்ட அறை இருக்கிறது. எனக்கு இன்னும் பதில்கள் தேவை என அவர் வெளியிட்ட அடுத்த வீடியோவில், மாஸ்க், கிளவுஸ் அணிந்து கொண்டு பாதுகாப்பிற்காக சுத்தியலையும் எடுத்து கொண்டு கண்ணாடிக்கு பின்னால் இருக்கும் அறைக்குள் சமந்தா நுழைகிறார்.
அந்த அறையிலிருந்து நடந்து சென்று பார்த்த அவர், அது ஒரு முழு அப்பார்ட்மென்ட் என கூறுகிறார். அவர் வெளியிட்ட வீடியோக்களை டிக்டாக்கில் 7 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். டுவிட்டரில் இதனை அவர் பதிவிட, 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்து அதனை வைரலாக்கி உள்ளனர்.
0
0