பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பெண் பட்டதாரி… திடுக்கிட வைத்த தகவல்… அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…!!

Author: Babu Lakshmanan
27 April 2022, 12:48 pm
Quick Share

பாகிஸ்தானில் 30 வயதான பெண் முதுகலை பட்டதாரி தற்கொலை படை தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

கராச்சியில் உள்ள பல்கலையில் பாகிஸ்தான் மக்களுக்கு சீன மொழி கற்பிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் அருகே வந்து கொண்டிருந்த வேனை குறிவைத்து திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 2 சீன பெண்கள், வேன் ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர் ஆகியோர் உயிரிழந்தனர். இரண்டு சீன பெண்களை குறிவைத்து வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.

மேலும், படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், 3 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது ஒரு பெண் என தற்போது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள சிசிடிவி காட்சியில், சீன மொழி கற்பிக்கும் மையத்தின் நுழைவு வாயில் அருகே பெண் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். அப்போது, அந்த மையத்திற்கு சீன ஆசிரியர்கள் வந்து கொண்டிருந்த வேன் வந்த போது, அந்தப் பெண் தன்னிடம் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார்.

இந்த தற்கொலைபடை தாக்குதலில் சீனாவை சேர்ந்த 3 பேர் மற்றும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பெண் என மொத்தம் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவ அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும், தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பெண் 30 வயதான ஷரி பலோச் என்ற பரம்ஷா என்பவர் என்றும், முதுகலை பட்டதாரியான இவருக்கு 2 குழந்தைகள் இருப்பதாகவும், கணவர் மருத்துவராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பர்ம்ஷா பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தற்கொலைப்படை தாக்குதல் பிரிவான மஜித் பிரிவில் சேர்ந்த இவர், இந்தப் பிரிவில் இருந்து விலக வாய்ப்பு கிடைத்தும், அவர் அதனை ஏற்கமறுத்ததாக சொல்லப்படுகிறது.

பலுசிஸ்தான் விடுதலை ராணுவ அமைப்பை சேர்ந்த பெண் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது இதுவே முதல்முறை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மஜித் பிரிவு தொடர்ந்து சீனர்களை குறிவைத்து தொடர்ந்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 1678

0

0