ஒன்றல்ல…ரெண்டல்ல…4 காதுகள்….வயிற்றில் ஹார்ட்டின் வடிவம்: இணையத்தை கலக்கும் மிடாஸ் மியாவ்..!!(வீடியோ)

Author: Aarthi Sivakumar
20 November 2021, 12:53 pm
Quick Share

துருக்கி: நான்கு காதுகளுடன் பிறந்த அதிசய பூனையின் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில்

கடந்த ஜூலை 14ஆம் தேதி துருக்கி நாட்டில் பிறந்து நான்கு மாதங்களே பூனைக்கு மிடாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பூனைக்கு தனி இன்ஸ்டகிராம் கணக்கு தொடங்கி மூன்று வாரங்களில் சுமார் 20,000 பேர் பின் தொடர்ந்துள்ளனர்.

Image

இந்தப் பூனைக்கு திடீரென கூடுதலாக இரண்டு காதுகள் முளைத்துள்ளன. இதுமட்டுமல்லாமல், இந்தப் பூனையின் வயிற்றில் இதயம் போன்ற வடிவமைப்பில் கியூட்டான வெள்ளை முடிகளும் இருப்பது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மிடாஸ் பகல் நேரம் முழுவதும் தூங்குவதாகவும், இரவு நேரம் முழுவதும் விழித்திருப்பதாகவும் அதன் உரிமையாளர் கூறியுள்ளார். கேனிஸுக்கு சொந்தமான தோட்டத்தில் ஒரு பூனை ஏழு குட்டிகளை ஈன்றுள்ளது. இதில் நான்கு காதுகளுடன் பிறந்த மிடாஸை மட்டும் அவர் வீட்டுக்கு அழைத்து வந்து வளர்க்கிறார்.

நான்கு காதுகளுடன் இருக்கும் மிடாஸுக்கு, காது கேட்கும் திறனில் எந்த கோளாறும் இல்லை என மருத்துவர் தெரிவித்துள்ளதாக கேனிஸ் கூறுகிறார்.

Views: - 498

0

0