கொரோனா தடுப்பூசியை பெற்ற ராஜ்நாத் சிங்..! எஸ்சிஓ கூட்டத்தில் வழங்கி அசத்திய ரஷ்யா..!

5 September 2020, 3:09 pm
Rajnath_Singh_Russia_Coronavirus_Vaccine_Updatenews360
Quick Share

உலகின் முதல் பதிவு செய்யப்பட்ட ரஷ்யாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ), காமன்வெல்த் சுதந்திர நாடுகளின் (சிஐஎஸ்) கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (சிஎஸ்டிஓ) மற்றும் செர்பியா குடியரசு ஆகியவற்றின் பாதுகாப்பு அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டது என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிராக ஸ்புட்னிக் -வி எனும் உலகின் முதல் தடுப்பூசியை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கியதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த மாதம் அறிவித்தார். தனது மகள்களில் ஒருவருக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டதாகவும், அது மிகவும் திறம்பட செயல்படுவதாகவும், நிலையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதாகவும் அவர் கூறினார்.  

நேற்று ராஜ்நாத் சிங், நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய ரஷ்ய அரசாங்கத்தையும் ரஷ்ய மக்களையும் பாராட்டினார் மற்றும் கொடிய நோய்க்கு எதிராக தடுப்பூசி உருவாக்கியதற்காக ரஷ்யாவின் விஞ்ஞானிகளுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற எஸ்சிஓ கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், “தொற்றுநோயை வெற்றிகரமாக நிர்வகித்த அரசாங்கத்தையும் ரஷ்ய மக்களையும் வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து நேற்று கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுக்கும் இந்த மருந்து வழங்கப்பட்டது.

இதற்கிடையில், இந்தியாவில் உள்நாட்டில் தடுப்பூசி தயாரிக்க ரஷ்யா முன்னணி மருந்து உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Views: - 7

0

0