இது ஒரு மோசமான கனவு! பல்லியின் மீது தூங்கிய சிறுவனின் கன்னத்தை பாருங்க!

27 February 2021, 9:22 am
Quick Share

வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்த மாணவன், தூங்கி விழுந்த போது, நோட்டிற்கும் அவனது முகத்துக்கும் இடையே பல்லி ஒன்று மாட்டி கொண்டது. தூங்கி எழுந்தபின் தன் முகத்தில் பல்லி அச்சுடன் எழ, அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பள்ளியில் வகுப்புகளை கவனிக்கும் போதோ அல்லது வீட்டுப்பாடம் செய்யும் போதோ எத்தனை முறை நீங்கள் தூங்கி விழுந்திருக்கிறீர்கள்..? அப்போது கோபக்கார ஆசிரியரிடமோ அல்லது அம்மாவிடமோ நீங்கள் மாட்டி கொண்டால் என்ன நடந்திருக்கும். ஆனால் தைவானை சேர்ந்த சிறுவன் ஒருவன், தூங்கி எழும்போது, முகத்தில் பல்லி அச்சுடன் எழுந்திருப்பான் என அவர் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டான்.

டுவிட்டர் பயனரான ஜாக்சன் லு, பல்லி அச்சுடன் சிறுவினின் புகைப்படத்தையும், வீட்டுப்பாடம் செய்யும் நோட்டில் பல்லி ஒன்று இறந்து கிடப்பதையும் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தில் அந்த மாணவன், மிகவும் எரிச்சலாக நின்று கொண்டிருப்பது பதிவாகி இருக்கிறது. ‘வீட்டுப்பாடம் செய்ய நீங்கள் எரிச்சல் அடைந்தாலும் பரவாயில்லை. ஆனால் இவனை போல் உங்களுக்கு ஒரு ‘மோசமான கனவு’ அமைந்துவிட கூடாது என சீன மொழியில் எழுதி பதிவிட்டிருக்கிறார்.

இந்த டுவிட், மைக்ரோ பிளாக்கிங் பிளாட்பாரத்தில் வைரலாகியுள்ளது. 6,600க்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்ற இந்த புகைப்படத்தை கண்டு, நெட்டிசன்களால் சிரிப்பதை நிறுத்த முடியவில்லை. பலரும் இதனை மோசமான கனவு எனவும், இது எப்படி நடந்தது எனவும் கேள்வி கேட்டு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஒருவர், ஐயோ.. இப்படி நடந்தால் நான் இறந்து விடுவேன் என பீதியுடன் பதிவிட்டிருக்கிறார். மற்றொருவர், ‘எனக்கு தூக்கம் வரும்போது இதனை நான் நினைத்து பார்ப்பேன்’ என பதிவிட்டுள்ளார். முன்னதாக, ஒரு மழலையர் பள்ளி மாணவர், ஜூம் வகுப்பில் கலந்துகொண்டபோது, ஒரு சேரில் அமர்ந்து நிம்மதியாக தூங்கிக்கொண்டிருக்கும் புகைப்படம் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

Views: - 11

0

0