ரயில் முன் இளம்பெண்ணை தள்ளிவிட்ட இளைஞர்…உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்: பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!
Author: Aarthi Sivakumar17 January 2022, 10:13 am
பெல்ஜியம்: ப்ரூஸ்ஸல்ஸில் ரயிலுக்காக காத்திருந்த பெண்ணை இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் தள்ளிவிட்ட பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
பெல்ஜியம் தலைநகர் ப்ரூஸ்ஸல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் ரயிலுக்காக காத்திருக்கிறார். அப்போது, அந்த பெண்ணின் பின் நின்றிருந்த இளைஞன் ரயில் வரும் சமயம் பார்த்து தண்டவாளத்தில் இளம்பெண்ணை தள்ளி விடுகிறான்.
நிலைதடுமாறிய அந்த பெண் தண்டவாளத்தில் விழுந்ததை கண்டவர்கள் பதறிப்போயினர். அந்த சமயத்தில் சமயோசிதமாக செயல்பட்ட ரயில் ஓட்டுநர் விரைந்து ரயிலை நிறுத்தியதால் அந்த பெண் உயிர்தப்பினார். இந்த கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டு தப்ப முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த அதிர்ச்சி தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. எதற்காக இளைஞர் இளம்பெண்ணை தண்டவாளத்தில் தள்ளி கொல்ல முயன்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0
0