ரிஷப் பந்த் கேட்ட கேள்வி? சாஹலின் பதிலால் சிரித்து உருளும் நெட்டிசன்கள்

26 January 2021, 8:35 am
Quick Share

உலகின் பிரபல கார்ட்டூன் கேரக்டர் அச்சிட்ட டிசர்ட்டை அணிந்து கொண்டு போஸ் தந்த, இந்திய கிரிக்கெட்டின் அதிரடி நாயகன் ரிஷப் பந்த் ‘இந்த கார்ட்டூனை நீங்கள் எத்தனை பேர் பார்த்திருக்கிறீர்கள்’ என கேள்வி கேட்கிறார். அதற்கு சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் அளித்த பதில் நெட்டிசன்களுக்கு சிரிப்பை வரவழைத்துள்ளது. அப்படி என்ன பதில் அளித்தார் தெரியுமா?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. ரிஷப் பந்த்தின் அதிரடி பேட்டிங். விக்கெட் கீப்பிங்கில் கேட்களை கோட்டை விட்டாலும், தான் எடுத்த ரன்கள் மூலம் அதனை கவர் செய்துவிட்டார். 100வது டெஸ்ட் போட்டியை விளையாடி முடித்த ஆஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளர் நாதன் லயனுக்கு, காபா டெஸ்ட்டில் பந்த் செய்த சம்பவம் கனவில் கூட வந்து தொல்லைபடுத்தும்.

இந்நிலையில், ரிஷப் பந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அவர், உலக பிரபலமான கார்ட்டூன் கேரக்டரான டாம் அண்ட் ஜெர்ரி கேரக்டரை பெரிதாக அச்சிட்ட டிசர்ட் அணிந்திருக்கிறார். இப்புகைப்படத்துடன், என் டிசர்ட்டில் இருக்கும் இந்த கார்ட்டூனை, உங்களில் எத்தனை பேர் பார்த்திருக்கிறீர்கள்? என்ற கேள்வியுடன் பதிவிட்டார்.

நெட்டிசன்கள் பலரும், தாங்கள் தற்போது வரை டாம் அண்ட் ஜெர்ரி பார்ப்பதாகவும், குழந்தை பருவத்தை சிரிப்பில் வைத்திருந்த கேரக்டர் எனவும் பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட துவங்க, அவரது இந்த பதிவு வைரலாக துவங்கியது. ஆனால், காமெடிக்கு புகழ்போன, இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் அளித்த பதில் தான் தற்போது ஹாட் டாபிக் ஆகியிருக்கிறது.

அவரது கேள்விக்கு பதில் அளித்துள்ள சாஹல், ‘உன்னையா இல்ல டாமையா சகோதரா’ என பதிலளித்துள்ளார். அவரது இந்த பதிலுக்கு பலரும் சிரிப்பு எமோஜிக்களை பதிவிட்டு வருகின்றனர். இதே போல், ஆப்கானிஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கானும், ‘நான் பலமுறை பார்த்திருக்கிறேன். உன்னையும், டாமையும்’ என பதிவிட்டார். இதற்கும் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்துள்ளன.

Views: - 12

0

0