புது காதலியின் சொல்லை தட்டாமல் செய்யும் சிம்பு..அதுக்குன்னு இப்படியா ..?

Author: Rajesh
30 March 2022, 4:47 pm

சினிமாத்துறையில், பரபரப்புக்கு என்றுமே பஞ்சம் இல்லாதவர் தான் நடிகர் சிம்பு, குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் சிறு வயதிலேயே கலக்கி இருப்பார். அவர் நடித்த மன்மதன், வல்லவன் போன்ற படங்கள், சினிமாத்துறையில் அவருக்கென்றே, ஒரு அங்கிகாரத்தைக் கொடுத்தது.

சினிமாவில், மட்டுமல்லாமல், காதல் வாழ்விலும் பல இன்னல்களையும், தோல்விகளையும் நடிகர் சிம்பு சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே ஈஸ்வரன் படத்தில் சிம்புவுடன் ஜோடியாக நிதி அகர்வாலை காதலிப்பதாகவும், இருவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த ஜோடி விரைவில் திருமண தேதியை அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகின ஆனால் இது குறித்து சம்பந்தப்பட்ட இருவரும் வாய் திறக்காமல் இருக்கின்றனர். இந்நிலையில் தான் சிம்பு குறித்து மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

நிதி அகர்வால் இப்போது சிம்புவின் கால்ஷீட் விவகாரம் உட்பட அனைத்தையும் கவனித்து வருகிறார். சிம்பு எப்போது ஷூட்டிங் போக வேண்டும், எந்தப் படத்தில் நடிக்க வேண்டும், யாருக்கு கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்பது போன்ற அனைத்து முக்கிய பொறுப்புகளையும் அவர் தான் கவனித்துக் கொள்கிறாராம்.

நிதி அகர்வால் தன்னுடைய மேனேஜர் மூலமாக இதனை பார்த்துக் வருகிறாராம். சிம்புவும் அவர் சொல்படி தான் அனைத்து விஷயங்களையும் செய்து வருகிறாராம். நிதி அகர்வால் சிம்புவை இப்படி கண்ட்ரோல் செய்வது பற்றி தான் தற்போது சினிமாத்துறையினர் பேசி வருகின்றனர்.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்