தியேட்டரில் திரிஷாவுடன் தனுஷ் செய்த வேலை… மாமியார் இருக்கும்போதே இப்படியா?

Author: Shree
10 August 2023, 2:20 pm

தொடர் தோல்வியால் பீல்டவுட் ஆகவிருந்த சமயத்தில் நெல்சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி மீண்டும் புத்துணர்ச்சியுடன் மார்க்கெட் பிடித்துள்ளார். ஆம் இன்று வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், சுனில், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தை தவிர, பிற மாநிலங்களில் அதிகாலை 6 மணிக்கு முதல் காட்சி வெளியானது. தொடர்ந்து, தமிழகத்தில் 9 மணிக்கு படம் ரிலீஸாகியுள்ளது. படம் வெளியானதால் தியேட்டரில் ரஜினிகாந்த் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், ஆட்டம், பாட்டத்துடன் படத்தை கொண்டாடி வருகின்றனர். படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வெளியாகி ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்துள்ளது.

எதிர்பார்த்த லாபத்தை தாண்டி வசூல் ஈட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் திரிஷாவுடன் தியேட்டரில் படம் பார்த்த புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. ஆனால் இது ஜெயிலர் படம் பார்த்தபோது எடுக்கப்பட்டது இல்லை. பேட்ட படம் பார்த்த போது அப்படத்தின் நாயகியான திரிஷாவுடன் படம் பார்த்துள்ளார். இதனை இந்த சமயத்தில் வெளியிட்டு மாமியார் இருக்கும்போதே திரிஷாவுடன் தியேட்டரில் லூட்டியடிக்கும் தனுஷ் என கசியவிட்டு கலாய்த்து தள்ளியுள்ளனர்.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்