அஜித்திற்கு ஜோடியாகும் மிருணாள் தாகூர் – கோலிவுட்டில் டென்ட் போட்டு செட்டில்!

Author: Rajesh
9 February 2024, 9:52 pm

பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை மிருணால் தாக்கூர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சீரியல் நடிகையாக தனது கெரியரை ஆரம்பித்த மிருணாள் குங்கும் பாக்யா தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அந்த சீரியல் தான் தமிழில் இனிய இருமலர்கள் என டப் செய்யப்பட்டு வெளியானது.

ajith -updatenews360

தமிழிலும் சூப்பர் ஹிட் அடித்து கோலிவுட் ரசிகர்களின் பரீட்சியமான முகமாக தென்பட்டார். தொடர்ந்து சில தொடர்களில் நடித்து வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர இந்தியில் 2018ல் வெளியான லவ் சோனியா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

Mrunal Thakur

அதையடுத்து லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் நடித்து விமர்சனத்திற்கு உள்ளாகினார். தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க பிசியாக நடித்து வரும் மிருணாள் தாகூர். குறிப்பாக தென்னிந்திய சினிமாவான கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது அஜித் -ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகவுள்ள ஏகே63 படத்திலும் மிருணாள் தான் நாயகி என்றும் அவரிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்திவிட்டதாகவும் தகவல்கள் கூறுகிறது. மேலும் இப்படத்தில் நடிகை தபுவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்