ஆஸ்காரில் நுழைந்த ராயன்.. சர்வதேச அளவில் கொண்டாடப்படும் தனுஷின் படம்..!

Author: Vignesh
2 August 2024, 5:19 pm

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ராயன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் வட சென்னையில் தன் தம்பிகள் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வரும் ராயன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் திருப்பங்களும் ஆக உருவானது.

படம் முழுவதும் கொலை, வெட்டு, குத்து என இருப்பதால் படத்திற்கு சென்சார் போர்டு நிறுவனம் A சர்டிபிகேட் வழங்கியது.

இந்நிலையில், படத்தின் திரைக்கதை புத்தகத்தினை ஆஸ்கார் விருதினை வழங்கும் அகடாமி நிறுவனமான அகடாமி மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நிறுவனத்தில் உள்ள நூலகத்தில் ராயன் படத்தின் திரைக்கதை புத்தகத்தை வைக்க தேர்வாகியுள்ளது.

இந்த தகவலை ராயன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனுஷ் மற்றும் ராயன் படக்குழுவினருடைய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை கேள்விப்பட்ட பலரும் ஒரு இயக்குனராக தனுசுக்கு இது மாபெரும் பெருமை என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

  • sridevi mother did not accept that sridevi to marry rajinikanth ரஜினிகாந்தின் காதலை குழி தோண்டி புதைத்த ஸ்ரீதேவியின் தாயார்- அடப்பாவமே!