Rolls-Royce விற்றுவிட்டு விஜய் வாங்கியுள்ள பிரம்மாண்டமான கார்… இத்தனை கோடியா?

Author:
13 August 2024, 5:19 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய் தற்போது கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே விஜய் அரசியலில் இறங்கி “தமிழக வெற்றி கழகம்” என்ற பெயரில் கட்சியை துவங்கி அரசியலில் ஈடுபட இருக்கிறார்.

இப்படியான நேரத்தில் நடிகர் விஜய் சமீபத்தில் தான் ஆசை ஆசையாய் வாங்கிய Rolls-Royce காருக்கு வரி கட்டமுடியாமல் அதனை ரூ.2. 6 கோடிக்கு விற்பனை செய்துவிட்டார். மேலும், Volvo காரையும் விற்றுவிட்டார். இந்நிலையில் தற்போது புதிதாக Lexus LM எனும் புதிய சொகுசு கார் ஒன்றை விஜய் வாங்கியுள்ளார்.

அதன் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பிரம்மாண்டமாக பளபளன்னு ஜொலிக்கும் இந்த காரின் மதிப்பு ரூ. 2.50 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. விஜய் இந்த புதிய பிரமாண்டமான Lexus LM கார் எடுத்துக்கொண்டு விஜய் வீட்டில் இருந்து வெளியே வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ:

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?