காங்கிரஸ் கட்சிக்கு அடி மேல் அடி… கட்சியில் இருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர் : பொறி வைத்த பாஜக!!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2024, 2:54 pm
ashok
Quick Share

காங்கிரஸ் கட்சிக்கு அடி மேல் அடி… கட்சியில் இருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர் : பொறி வைத்த பாஜக!!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், தேசியாக கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதில் குறிப்பாக, காங்கிரஸுக்கு இந்த தேர்தல் முக்கிய வாய்ந்தவையாக கருதப்படுவதால், தேர்தல் பணியில் மும்மரம் காட்டி வருகின்றனர்.

இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகி வருவது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக மக்களவை தேர்தல் மற்றும் மாநில தேர்தலை வரும் மாதங்களில் எதிர்கொள்ளும் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகிறார்கள்.

அந்தவகையில், கடந்த மாதம் முரளி தியோரா மகன் மிலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் ஐக்கியமானார்.

அதேபோல், சமீபத்தில் மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சராக இருந்த பாபா சித்திக் விலகி ஷாக் கொடுத்தார்.

இதன் வரிசையில், தற்போது முன்னாள் முதல்வரும், தற்போதைய எம்எல்ஏவான அசோக் சவான், பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான தகவலுக்கு மத்தியில், காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது காங்கிரஸுக்கு பெரும் அடியாக அமைந்துள்ளது.

2008 டிசம்பரில் இருந்து 2010 நவம்பர் வரை மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் முதல்வராக பதவி வகித்தார் அசோக் சவான். 2014 முதல் 2019 வரை மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

எனவே, காங்கிரஸில் இருந்து விலகிய அசோக் சவான், விரைவில் அவர் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 163

0

0