பள்ளி வகுப்பறையில் புகுந்த நல்ல பாம்பு : மாணவர்களை காப்பாற்ற வந்தவருக்கு நேர்ந்த விபரீதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 March 2023, 2:58 pm
Snake in School - Updatenews360
Quick Share

கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் பள்ளி நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் விஷம் மிகுந்த நல்லபாம்பு ஒன்று பள்ளியில் ஒரு வகுப்பறைக்குள் புகுந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலறி அடித்து கொண்டு வெளியேறினர். இந்நிலையில் அவ்வழியாக வந்த இஎஸ்ஐ மருத்துவமனையில் தோட்ட வேலை செய்து வரும் பாலசுப்ரமணியம் என்பவர் அந்த நல்லப்பாம்பை பிடித்து வெளியேற்றினார்.

அந்நிலையில் எதிர்பாராத விதமாக அந்த நல்லபாம்பு அவரது இடது கைவிரலில் கடித்துள்ளது. உடனடியாக அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றினர். இதனையடுத்து சிகிச்சை முடிந்து தற்போது வீடு திரும்பிய பாலசுப்பிரமணியம் நலமுடம் உள்ளார். மாணவர்களின் உயிரை காப்பாற்ற விரைந்து செயல்பட்ட பாலசுப்ரமணியத்தை பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள், மருத்துவர்கள் என அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Views: - 305

0

0