மீண்டும் ஐஸ்வர்யாவுடன் இணைய தூதா? ரொம்ப எமோஷனல் ஆகிட்டேன் – நடிகர் தனுஷ் வேதனை..!

Author: Vignesh
4 December 2023, 7:09 pm
Dhanush-and-Aishwarya-updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலிப்பவர் தனுஷ். இவர் நடிப்பு மட்டுமல்லாது பாடகர், பாடலாசிரியர், இயக்கம் என அனைத்திலும் ஒரு கலக்கு இருக்கிறார் என்று சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் ஹாலிவுட் வரை சென்று தி கிரேமேன் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இவர் அருள் மாதேஸ்வரர் இயக்கத்தில் தற்போது, கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். தனுஷும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு யாத்திரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

dhanush - updatenews360

இவர்களது வாழ்க்கை இப்போது பிரிவில் இருக்கிறது. எந்த காரணத்திற்காக இருவரும் பிரிந்தார்கள் என்று தற்போது, வரை தெரியவில்லை. ஆனால், இரண்டு பேரும் இன்னும் விவாகரத்து வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான 3 திரைப்படம் 11 வருடங்களுக்குப் பிறகு ரீலீஸ் ஆனது.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தனுஷ் ரெஸ்பான்ஸை பார்த்து ரொம்பவே எமோஷனல் ஆகிவிட்டேன். அனைவருக்கும் எனது நன்றிகள் என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் மனைவி இயக்கத்தில் தான் நடித்த படத்திற்கு தனுஷ் இவ்வளவு எமோஷனல் ஆகிறாரே அவர்கள் மீண்டும் இணைந்து வாழ்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஒரு வேலை ஐஸ்வர்யாவுக்கு இது தனுஷ் விடும் தூதா என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 115

0

0