ஜவான் படத்தில் டம்மி ஆகும் நயன்தாரா.? Honeymoon போன நயன்தாராவுக்கு ஷாக் கொடுத்த அட்லி.!

Author: Rajesh
23 June 2022, 2:07 pm
Quick Share

தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என வரிசையாக ஹிட் படங்களை இயக்கிய அட்லீ, தற்போது ஜவான் என்கிற பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது.

தற்போது இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. இந்த படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா கலந்துகொள்ளவில்லை. அண்மையில் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட அவர் தற்போது தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றுள்ளதால், மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார் அட்லீ.

இந்நிலையில், நயன்தாரா ஹனிமூன் சென்ற நேரத்தில் இப்படத்தில் அதிரடி மாற்றம் செய்துள்ளார் அட்லீ. அதன்படி நடிகை தீபிகா படுகோனேவுக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். ஏற்கனவே நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் நிலையில், தீபிகா எந்த ரோலில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்கிற தகவல் வெளியாகவில்லை.

நயன்தாராவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தீபிகாவில் கேரக்டர் இருக்குமா அல்லது அந்த டம்மி ஆக்கப்படுவாரா என என்பது குறித்து சினிமா வட்டாராத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகி வருகிறது. ஜவான் படத்தை அடுத்தாண்டு ஜூன் மாதம் 3-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Views: - 581

2

0