முழு நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா.. திடீரென இப்படி செய்யக் காரணம் என்ன..?

Author: Babu Lakshmanan
2 July 2022, 1:30 pm
Quick Share

தெலுங்கு திரையுலகில் இளம் கதாநாயகனாக அறிமுகமாகி, ஏராளமான ரசிகைகளை கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. பல வெற்றி படங்களில் நடித்த இவர், நோட்டா படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். தற்போது லிகர், குஷி, ஜன கன மன உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார்.

அதில், பூரி ஜெகன்நாத் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள லிகர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படமானது, தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். மேலும் அமெரிக்கா குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இந்த படத்தில் ஒரு கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் சில போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது.

இந்நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா, லிகர் படத்தின் புதிய போஸ்டரை தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் முழு நிர்வாணமாக இருப்பது போன்று போஸ்டர் வெளியாகி உள்ளது.இந்த போஸ்டர் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தாலும் இப்படி தைரியமாக ஒரு போட்டோவை வெளியிட்ட படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 847

1

3