அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து இருவர் பலி : நிவாரணம் வழங்க கோரி மின்துறை அலுவலகத்தை அதிமுக முன்னாள் எம்எல்ஏ முற்றுகை…!!

Author: Udayachandran RadhaKrishnan
21 June 2022, 12:26 pm
Admk Mutrugai - Updatenews360
Quick Share

புதுச்சேரி : மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கக்கோரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் தலைமையில் பொதுமக்கள் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி, முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள அக்ரஹாரம் பகுதியில் நேற்று மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்கள் மற்றும் மின்சாரம் தாக்கியவர்களுக்கு நிவாரணம் வழங்கி அரசு சார்பில் பணி வழங்கக்கோரி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட தொகுதி மக்கள் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முற்றுகையில் ஈடுடப்பர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் இதேபோல் மின்சாரம் தாக்கியவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்க கூடாது எனவும் வலியுறுத்தினார்.

Views: - 1364

0

0