உங்க சருமம் என்றும் ஸ்வீட் 16 போல இருக்க நீங்க யூஸ் பண்ண வேண்டிய பொருள் இது தான்!!!

Author: Hemalatha Ramkumar
5 May 2022, 10:31 am
Quick Share

நீங்கள் எந்தப் பருவம், அல்லது வெப்ப நிலையில் இருந்தாலும், அல்லது வீட்டிற்குள் அமர்ந்திருந்தாலும், சன்ஸ்கிரீன் என்பது உங்கள் சருமப் பராமரிப்பு வழக்கத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

ஒரு வேலை நீங்கள் தோல் பராமரிப்பு ‘வழக்கம்’ இல்லாத ஒருவராக இருந்தாலும் கூட, நீங்கள் அடிப்படையாக சில தோல் பராமரிப்பு விஷயங்களை தொடங்கலாம் – சுத்தம் செய்தல், ஈரப்பதமாக்குதல், SPF பயன்படுத்துவது போன்றவை. ஒருவரது சரும ஆரோக்கியத்தை தொடர்ந்து பராமரிப்பது மிக முக்கியமானது.

நீங்கள் 20-களின் பிற்பகுதியில் அல்லது 30-களின் முற்பகுதியில் இருப்பவராக இருந்தால், மிகவும் பயனுள்ள வயதான அறிகுறிகளை எதிர்க்கும் ஒரு தயாரிப்பு அல்லது மூலப்பொருளைத் தேடும் ஒருவராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உதவும். ஏனெனில் அதற்கான பதில் சன்ஸ்கிரீன்.

உங்கள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கவில்லை என்றால், நீங்கள் பயன்படுத்தும் மற்ற அனைத்து வயதான எதிர்ப்பு தயாரிப்புகளும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களுக்கான சன்ஸ்கிரீனைத் தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. சூரியனின் UVA மற்றும் UVB கதிர்கள் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தைத் தூண்டுகின்றன. அவை சுருக்கங்கள், தொய்வு தோல், நிறமாற்றம் மற்றும் சருமத்தின் இளமைப் பண்புகளைப் பறிக்கும் பல சிக்கல்களுக்கு முக்கிய காரணமாகும். இந்த பாதிப்பில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதன் மூலம், சன்ஸ்கிரீனின் தினசரி பயன்பாடு வயதான எதிர்ப்பு மற்றும் தோல் ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

சன் ஸ்கிரீன் விஷயத்தில் நிலைத்தன்மையும் விடாமுயற்சியும் முக்கியம். அதாவது, ஒவ்வொரு நாளும் SPF 30 அல்லது அதற்கு மேற்பட்டவற்றைப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் வீட்டிற்குள் இருக்கும் ஒருவர் என்றாலும் சூரியனின் தீங்கு விளைவிக்கும் UVA கதிர்கள் கண்ணாடிக்குள் ஊடுருவலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

சிறந்த பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட வயதான எதிர்ப்புப் பலன்களுக்காக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் நீங்கள் ஒரே நேரத்தில் சூரிய பாதுகாப்பு மற்றும் வயதான எதிர்ப்பு பாதுகாப்பைப் பெறுகிறீர்கள். இது நீங்கள் பயன்படுத்தும் பிற வயதான எதிர்ப்பு தயாரிப்புகளை மிகவும் சிறப்பாகச் செயல்பட உதவும்.

Views: - 985

0

0