கருத்துப்போன முகத்தை பளபளக்க செய்ய ஹோம்மேடு ப்ளீச்!!!

Author: Hemalatha Ramkumar
3 December 2022, 2:07 pm
Quick Share

சருமம் கருத்துபோய்விட்டால் அதனை பளீச்சென்று மாற்ற பல விதமான ப்ளுச் செயல்முறைகள் உள்ளன. பெரும்பாலானவர்கள் கடைகளில் விற்கப்படும் பொருட்களை பயன்படுத்தி தங்கள் சருமத்தை ஒளிர வைக்க முயற்சி செய்கின்றனர். இதன் மூலமாக ரிசல்ட் கிடைத்தாலும் அது நிரந்தரமான ஒன்றாக இருக்காது.

மேலும் இரசாயனங்கள் நிரம்பிய பொருட்களை பயன்படுத்துவது சருமத்திற்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே கூடுமானவரை இயற்கை முறைகளை பின்பற்றுவது சிறந்தது. அந்த வகையில் இன்று கருத்துப்போன சருமத்தை ஒளிர வைக்க உதவும் ஒரு இயற்கை முறை குறித்து பார்க்கலாம்.

வீட்டில் இருந்தவாறே ப்ளீச் செய்ய முதலில் புளியை சுடு தண்ணீரில் ஊற வையுங்கள். புளி ஊறியதும் கரைத்து புளி கரைசலை தனியாக எடுத்து கொள்ளவும். இந்த புளி கரைசலில் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, தேன் மற்றும் அரிசி மாவு சேர்த்து கலக்கவும்.

இந்த கலவை சிறிது நேரம் ஊறட்டும். அரை மணி நேரம் கழித்து முதலில் உங்கள் முகத்தை நன்கு கழுவி கொள்ளுங்கள். பின்னர் சுத்தமான உங்கள் முகத்தில் நாம் ஏற்கனவே ஊற வைத்த புளி கலைவயை தடவவும். சில நிமிடங்கள் காத்திருந்து முகத்தை சாதாரண தண்ணீர் கொண்டு கழுவவும். பின்னர் லேசாக துண்டு ஒன்று வைத்து ஒத்தி எடுக்கவும். இதனை சில வாரங்களுக்கு செய்து வந்தால் கருத்துப்போன முகம் தெளிவாகி, உங்கள் ஒரிஜினல் நிறத்தைப் பெறலாம்.

Views: - 152

0

0