சாக்லேட் ஃபேஷியல்: இந்த தீபாவளிக்கு உங்கள் சருமத்தை ஜொலிக்க வைக்கும் சரியான ஃபேஷியல்!!!

Author: Hemalatha Ramkumar
20 October 2022, 9:32 am
Quick Share

சாக்லேட் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. ஆனால் உங்களுக்கு பிடித்த சாக்லேட் உங்கள் சரும பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆம், சாக்லேட்டை முகத்தில் தடவலாம். ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன மற்றும் உங்கள் சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் சாக்லேட் முகமூடி உங்கள் இறந்த சரும செல்களை அகற்றி, உங்கள் சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவும். எனவே, இப்போது நாம் மூன்று விதமான DIY சாக்லேட் ஃபேஸ் பேக்குகளைப் பற்றி பார்க்கலாம். இதன் சிறப்பு என்னவென்றால் இதனை வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம்.

●1/2 கப் உருகிய டார்க் சாக்லேட் மற்றும் 2 டீஸ்பூன் முல்தானி மிட்டி சேர்த்து நன்கு கலக்கவும். கலவையை உங்கள் முகத்தில் தடவவும். அது காய்ந்ததும் தண்ணீரில் கழுவவும். பின்னர் உங்கள் சருமத்தை மென்மையான துண்டுடன் உலர வைக்கவும்.

●தேன் உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. டார்க் சாக்லேட்டுடன் கலந்து முகத்தில் தடவினால் இயற்கையான பொலிவு கிடைக்கும். இதற்கு ஒரு கிண்ணத்தில் ¼ கப் உருகிய டார்க் சாக்லேட், 1 டீஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் புதிதாக பிழிந்த எலுமிச்சை சாறு சேர்க்கவும். நன்கு கலந்து அந்த பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவவும். பேஸ்டை உங்கள் சருமத்தின் மீது மசாஜ் செய்து 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

●ஐந்து க்யூப்ஸ் டார்க் சாக்லேட்டை உருக்கி, இதனுடன் 1 1/2 டீஸ்பூன் ஃபிரஷான தயிர் சேர்க்கவும். நன்றாகக் கலந்து, பின்னர் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்க்கவும். இதை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு, கழுவவும்.

Views: - 298

0

0