மேக்கப் அணிவதால் ஏற்படும் முகப்பருவில் இருந்து தப்பிப்பது எப்படி…???

Author: Hemalatha Ramkumar
28 January 2022, 11:30 am
Quick Share

நீண்ட நேரம் மற்றும் தொடர்ந்து மேக்கப் அணிவது தோல் பிரச்சினைகளை, குறிப்பாக முகப்பருவை ஏற்படுத்துமா? என்ற கேள்வி ஒப்பனை ஆர்வலர்களிடையே எப்போதுமே இருக்கும் ஒரு கேள்வி ஆகும்.

இதற்கான பதில் ஆம் மற்றும் இல்லை. ஆம், ஏனென்றால் முகப்பரு – சில உள் சுகாதார நிலைகளால் ஏற்படவில்லை என்றால் – பொதுவாக மோசமான தோல் சுகாதாரம் மற்றும் தோல் புறக்கணிப்பு ஆகியவற்றின் விளைவாகும். முகப்பரு பாதிப்பு உள்ள ஒருவர், அவர்களின் முகம் தெளிவாக இருப்பதை உறுதிசெய்ய, செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை விடாமுயற்சியுடன் பின்பற்ற வேண்டும். முகப்பரு எதிர்ப்பு ஃபேஸ் வாஷ் மூலம் கழுவுதல், முகத்தை அடிக்கடி தொடாமல் பார்த்துக் கொள்வது, குறிப்பாக தூசி படிந்த, அசுத்தமான மேற்பரப்புகள் போன்றவற்றைத் தொட்ட பிறகு இதனை பின்பற்ற வேண்டும்.

ஒப்பனை பிரியர்களுக்கு, இது இன்னும் சில படிகளை உள்ளடக்கியது. நீங்கள் மேக்கப் அணியும்போது சில தோல் பராமரிப்பு குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும்.

மேக்கப்பை ஒருவர் படுக்கைக்கு செல்லும் முன் கவனமாக அகற்றி, அவர்களின் சருமத்திற்கு ஏற்ற சரியான வகையான பொருட்களைப் பயன்படுத்தினால், முகப்பரு ஏற்படாது.

மனதில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்:
* உங்கள் தோல் வகை மற்றும் நிலைக்கு ஏற்ப சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுங்கள் (முகப்பரு பாதிப்புள்ள சருமத்திற்கு ஆர்கானிக் மேக்கப் மிகவும் பொருத்தமானது).
* படுக்கைக்குச் செல்வதற்கு முன் கண் மேக்கப் உட்பட உங்கள் மேக்கப்பை அகற்றவும்.
* மேக்கப்பை மெதுவாகப் பயன்படுத்துங்கள்.
* ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு உங்கள் ஒப்பனை பிரஷ்கள் மற்றும் ஸ்பான்ஞ்சுகளை சுத்தம் செய்யவும்.
* உங்கள் சருமத்தை நன்கு சுத்தம் செய்யவும்.

Views: - 492

0

0