புருவங்களையும் விட்டு வைக்காத பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட குறிப்புகள்!!!

Author: Hemalatha Ramkumar
11 October 2022, 10:43 am
Quick Share

தலைமுடியில் பொடுகு ஏற்படுவதையே பொறுக்க முடியாத நமக்கு புருவங்களில் பொடுகு ஏற்படுவது இன்னும் கொடுமையான விஷயம். இருப்பினும் இதனை நினைத்து நீங்கள் கவலைப்பட தேவையில்லை. இதற்கு எளிமையான வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அது குறித்து இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பாதாம் எண்ணெய்:
சில துளிகள் சூடான பாதாம் எண்ணெயைக் கொண்டு உங்கள் புருவங்களை மசாஜ் செய்வது பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட உதவும். இரவில் படுக்கும் முன் இதை செய்யலாம். பாதாம் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் புருவத்தில் முடி உதிர்வதைத் தடுக்கலாம். மறுநாள் காலையில் உங்கள் முகத்தை கழுவ மறக்காதீர்கள்.

கற்றாழை ஜெல்:
கற்றாழை ஜெல் அனைத்து வகையான சரும பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாகும். பொடுகு நிறைந்த புருவங்களில் இருந்து விடுபட சிறிது சுத்தமான கற்றாழை ஜெல்லை உங்கள் புருவங்களில் தடவி, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

வேப்ப எண்ணெய்:
வேம்பு பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது அனைத்து வகையான தோல் பிரச்சினைகளிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இறந்த சருமம் மற்றும் பொடுகைப் போக்க உங்கள் புருவங்களில் சிறிது வேப்பெண்ணெய் தடவவும்.

வெந்தய விதைகள்:
புருவத்தில் பொடுகு உள்ளவர்களில் பெரும்பாலானோர் புருவத்தில் இருந்து முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிப்படுவார்கள். வெந்தய விதைகள் அமினோ அமிலங்களால் நிரம்பியுள்ளன. அவை சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டர்களாக செயல்படுகின்றன. வெந்தய விதைகளை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் பேஸ்டாக அரைத்து அதனை உங்கள் புருவங்களில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின்னர் அதை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

Views: - 536

0

0