சருமத்திற்கு கஸ்தூரி மஞ்சள் செய்யும் மாயாஜாலம்!!!

Author: Hemalatha Ramkumar
25 April 2022, 1:13 pm
Quick Share

ஆன்டி ஆக்ஸிடன்டாக செயல்படும் கஸ்தூரி மஞ்சள் சருமத்திற்கு பயன்படுத்தினால், ‌கிடைக்கும் நன்மை மற்றும் பயன்கள் என்ன? என்று பார்ப்போம். பலரும் தங்கள் முகத்தை எப்பொழுதும் பொலிவாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது உண்டு. சருமத்தில் உள்ள பல பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கஸ்தூரி மஞ்சள் பெரும் பங்கு வகிக்கின்றது. முக அழகு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படும் இந்த கஸ்தூரி மஞ்சள் இயற்கை நமக்கு அளித்த வரம் என்றே கூறலாம். முகப்பருக்கள், கரும்புள்ளிகள், முக சுருக்கங்கள் போன்ற அனைத்து வகையான சருமம் பிரச்சினைகளையும் தீர்க்கும் ஒரேயொரு சக்தி வாய்ந்த பொருள் இந்த கஸ்தூரி மஞ்சள் ஆகத்தான் இருக்க முடியும்.

கஸ்தூரி மஞ்சளின் நன்மைகள்:
இது சருமத்திற்கு நிறைய நன்மைகளை தருகிறது . தோல் நோய்களைப் போக்கும் தன்மை கொண்டது. சாதாரண மஞ்சளுக்கு பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தி வந்தால் முகம் பளபளப்பாகவும், பொலிவுடன் காணப்படும்.

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விட அதிக மணம் உடையது. கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றுடன் கலந்து கட்டிகள் மீது தடவினால் கட்டிகள் உடையும்.

கஸ்தூரி மஞ்சள் தூளை தேங்காய் எண்ணெய் கலந்து அடிப்பட்ட புண் அல்லது சிரங்குகள் மேல் பூசினால் விரைவில் குணமாகும்.

கஸ்தூரி மஞ்சளை பிற பொருட்கள்களுடன் எப்படி உபயோகிக்கலாம்:
சருமத்தை பளபளக்க செய்ய வீட்டிலேயே கிடைக்கும் 2 பொருட்களை பேஸ்பேக் போட்டுக் கொள்ளலாம். இது உங்கள் சருமத்தை பிரகாசமாகவும் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சருமத்தையும் கொடுக்கும். மேலும் சரும பொலிவுக்கு உதவும் அந்த பேக்கை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

கஸ்தூரி மஞ்சள் பேஸ்பேக்:-
தேவையான பொருட்கள்:
கஸ்தூரி மஞ்சள் – 1/2 தேக்கரண்டி
ரோஸ் வாட்டர் – 1டீஸ்பூன்

எப்படி செய்வது ?
ஒரு சின்ன கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் உங்களுக்கு தேவையான கஸ்தூரி மஞ்சளை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் ரோஸ் வாட்டரை சேர்த்துக் கொள்ளுங்கள். இரண்டு பொருட்களையும் நன்றாக கலந்து பேஸ்ட் போல் ஆக்கிக் கொள்ளுங்கள். இதனை உங்கள் முகத்தில் தடவி விட்டு பின்னர் சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள்.

இது உங்கள் முகத்தில் உள்ள் கருவளையம் மற்றும் கறையைப்‌ போக்கி உங்கள் சருமத்தை ஒளிரச் செய்ய உதவும். அதேபோல், கஸ்தூரி மஞ்சள் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இதை தனியாகவோ‌ அல்லது தேன் போன்றவற்றுடன் கலந்து பயன்படுத்தலாம்.

இந்த கஸ்தூரி மஞ்சள் முற்றிலும் இயற்கையானது . இதனால் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை . இருப்பினும், இந்த கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்துவதற்கு முன் இதனால் உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதை உங்களின் கைகளில் சிறிதளவு வைத்து பார்த்து விட்டு. பின்னர், பயன்படுத்துவது நல்லது.

Views: - 3986

2

0