பருக்கள் முதல் தழும்புகள் வரை… எல்லாவற்றிற்கும் குளு குளு சந்தன ஃபேஷியல்!!!

Author: Hemalatha Ramkumar
30 April 2022, 5:16 pm
Quick Share

பருக்கள், கருவளையம், சரும‌ அழற்சி என பல வகையான சரும பிரச்சனைகளுக்கு சந்தனம் ஒரு தீர்வாக இருக்கும்.சந்தனப் பொடி மட்டுமின்றி சந்தன‌ எண்ணெய்யும் பல‌ சருமப் பிரச்சனைகளை தீர்க்க கூடியது. சந்தனம் மிகுந்த குளிர்ச்சி தன்மை கொண்டது . சந்தனத்தை பயன்படுத்தி முகத்தை எப்படி பொலிவுடன் வைத்து கொள்வது என்று பார்ப்போம்.

கஸ்தூரி மஞ்சளும், சந்தனப் பொடியும்:
சந்தனப்‌ பொடி, கஸ்தூரி மஞ்சள், ஒரு துளி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.இப்படி செய்வதால் முகம் பொலிவோடு காணப்படும்.

சந்தனமும், முல்தானி மெட்டியும்:
சந்தனம் பொடி 1/2 ஸ்பூன், முல்தானி மெட்டி‌ 1/2 ஸ்பூன், தக்காளி சாறு 1 டேபிள்ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்வதால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும்.

சந்தன‌‌ எண்ணெயை முல்தானி மெட்டி‌ பவுடரில் சேர்த்து கலந்து முகத்திற்கு பயன்படுத்தினால் , சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

பன்னீர், சந்தனப் பொடியும்:
முகத்தில் பருக்கள் அதிகமாக இருந்தால் சந்தனப் பொடியுடன், பன்னீர் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்வதால் முகத்தில் உள்ள பரு தழும்புகள் மற்றும் பருக்கள் மறையும்.

எலுமிச்சை சாறும், சந்தனமும்:
சிறிதளவு எலுமிச்சை சாறு, 1/2 ஸ்பூன் சந்தனப்பொடி சேர்த்து கலந்து முகத்தில் ஃபேஸ்மாஸ்க் போட்டால் சருமத்தில் இறந்த செல்கள் நீங்கி முகம் பொலிவுடன் இருக்கும்.

சந்தனப்பொடியுடன் தயிர், கஸ்தூரி மஞ்சள், முல்தானி மெட்டி‌, தக்காளி சாறு சேர்த்து கலந்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் முகம் பொலிவோடும், பளிச்சென்றும் இருக்கும்.

சந்தனம் சருமத்திற்கு அதிக நன்மை தரக்கூடிய . ஆனால், தரமானதா,அசலா என கவனித்து வாங்குங்கள்.

வறண்ட சருமம் உள்ளவர்கள் சந்தன எண்ணெயாகவும், ஆயில் சருமம் உள்ளவர்கள் சந்தனப்பொடியாகவும் பயன்படுத்தலாம். அடிக்கடி பயன்படுத்த வேண்டாம்.

சந்தனத்தை முகத்தில் தடவுவதால் குளிர்ச்சி கிடைத்தாலும் அதனை இரவு முழுவதும் முகத்தில் விடக்கூடாது. சந்தனம் தடவி 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை மட்டும் வைத்திருந்து‌ முகத்தை கழுவி விட வேண்டும்.
சந்தனத்தை சரியான முறையில் பயன்படுத்தினால் அழகான சந்தனம் போன்ற மேனியை நிச்சயம் பெறலாம்.

Views: - 1636

0

0