இந்த காய்கறியை அடிக்கடி சாப்பிட்டால் முடி உதிர்வே இருக்காதாம்!!!

Author: Hemalatha Ramkumar
18 June 2023, 4:09 pm
Quick Share

Images are © copyright to the authorized owners.

Quick Share

பெரும்பாலும் எல்லா இடங்களிலும் எளிதாக வளரக்கூடிய கத்திரிக்காய் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. அவற்றின் நிறங்களுக்கு ஏற்ப அதில் உள்ள ஊட்டச்சத்துக்களும் மாறுபடும். கத்திரிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் அதன் மருத்துவ பண்புகளுக்காக அது உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீரிழிவு நோய் முதல் இதய நோய் வரை பல பிரச்சினைகளுக்கு கத்திரிக்காய் ஒரு தீர்வு தீர்வாக அமைகிறது. இது மட்டுமல்லாமல் கத்திரிக்காயில் அழகை மேம்படுத்தக்கூடிய ஒரு சில குணங்களும் உள்ளன. அது குறித்து இப்பொழுது பார்க்கலாம்.

மினரல்கள், வைட்டமின்கள் மற்றும் உணவு நார்ச்சத்து நிறைந்த கத்திரிக்காய் சருமத்தை உள்ளிருந்து சுத்தம் செய்ய உதவுகிறது. இதனால் சருமத்தின் பளபளப்பு அதிகரிக்கிறது. கத்திரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வர மினுமினுக்கான மேனியைப் பெறலாம்.

அதிக அளவு நீர்ச்சத்து நிறைந்த கத்திரிக்காய் நம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அளித்து நமது சருமத்தில் நீர் இழப்பு ஏற்படாமல் கவனித்துக் கொள்கிறது. அதோடு கத்திரிக்காயில் இருக்கக்கூடிய மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் தெளிவான மற்றும் மென்மையான சருமத்தை அளிக்கின்றது.

கத்திரிக்காயில் ஏராளமான அந்த ஆன்தோசயனின்கள் உள்ளன. இவை வயதாகும் போது ஏற்படக்கூடிய சுருக்கங்கள் மற்றும் கோடுகள் போன்ற அறிகுறிகளுக்கு எதிராக செயல்படும் ஆன்டி-ஆக்சிடன்டுகள்.

கத்திரிக்காயில் காணப்படக்கூடிய ஒரு குறிப்பிட்ட ஆன்டி-ஆக்சிடன்ட் சரும புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது. எனவே அடிக்கடி வெளியில் நேரத்தை செலவிடும் நபர்கள் கத்திரிக்காயை தங்களது உணவில் சேர்த்து வர சரும புற்று நோய் ஏற்படுவதில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

நாம் ஏற்கனவே கூறியது போல கத்திரிக்காயில் அதிக அளவு நீர் சத்து காணப்படுகிறது. இது மயிர் கால்களுக்கு ஊட்டமளிக்க உதவுகிறது. இதனால் தலைமுடி பலமடைகிறது.

கத்திரிக்காயில் உள்ள நல்ல அளவு மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் மயிர் கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து அதனை ஆரோக்கியமாக கவனித்துக் கொள்கிறது. இதனால் மயிர்க்கால்கள் தொடர்பாக ஏற்படும் பொடுகு போன்ற பிரச்சனைகளில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம்.

கத்திரிக்காயில் உள்ள என்சைம்கள் தலைமுடியில் உள்ள பாலிக்கில்களை தூண்டுகிறது. இது முடி வளர்ச்சியை அதிகரித்து அதனை வலிமையாக மாற்றுகிறது. மேலும் கத்திரிக்காயில் உள்ள நீர்ச்சத்து தலை முடியில் ஏற்படும் வறட்சியைப் போக்கி அதற்கு இயற்கையான பளபளப்பை அளிக்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 1303

0

0