பிக் பாஸில் இருந்து வெளியேறிய அக்ஷயா, பிராவோ… ரெண்டு பேருக்கும் இவ்வளவு சம்பளமா…? வெளியான தகவல்

Author: Babu Lakshmanan
28 November 2023, 10:05 am
Quick Share

மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற டிவி நிகழ்ச்சிகளில் பிக் பாஸும் ஒன்று. 6 சீசன்களை கடந்து 7வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் பரீட்சையமான முகங்கள் ஒரு சில பேர் தான் என்றாலும், நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சியில் முட்டல், மோதல்களால் சுவாரஸ்யத்தை உண்டாக்கி வருகிறது.

கடந்த வாரம் பிக் பாஸில் டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. இதில், பல்வேறு எதிர்ப்புகளை சம்பாரித்த பூர்ணிமா மற்றும் அக்ஷயா வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அக்ஷயா மற்றும் பிராவோ வெளியேற்றப்பட்டனர்.

50 நாட்களை கடந்து பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த அக்ஷயா ஒருநாளைக்கு ரூ.15 ஆயிரம் சம்பளமாக பெற்றுள்ளார். அதாவது, ரூ.7.50 லட்சம் முதல் 8 லட்சம் வரை சம்பளமாக வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேபோல, வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்த பிராவோவுக்கு ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் சம்பளமாக பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 217

0

0