மேற்கு வங்க ஆளுநருக்கு வாய்ப்பு அளித்த பாஜக : துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜெகதீப் தங்கர் தேர்வு!!

Author: Udayachandran RadhaKrishnan
16 July 2022, 9:19 pm
Jagdeep Dhankar - Updatenews360
Quick Share

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி காலம் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு உள்ளது.

அதன்படி துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் வரும் ஆகஸ்டு 6-ந் தேதி நடக்கிறது. இதில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழு இன்று கூடியது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாஜக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது யார் என்று முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா வெளியிட்ட அறிவிப்பில், ” பாஜக கூட்டணியின் சார்பாக ஜெகதீப் தங்கர் போட்டியிடுவார்” எனத்தெரிவிக்கப்பட்டது. ஜெகதீப் தங்கார் தற்போது மேற்கு வங்க ஆளுநராக உள்ளார்.

Views: - 460

0

0