கோவில் நிகழ்ச்சிகளில் கடவுள் நம்பிக்கை இல்லாத அமைச்சர்களை அனுமதிக்க மாட்டோம் : பாஜக பகிரங்க அறிவிப்பு

Author: Babu Lakshmanan
16 June 2022, 8:43 am
Quick Share

கன்னியாகுமரி : பிறமத நம்பிக்கை கொண்ட ,கடவுள் நம்பிக்கை இல்லாத அமைச்சர்களை கோயில் நிகழ்ச்சிகளில் அனுமதிக்கமாட்டோம் என்று பாஜக எம்எல்ஏ எம்.ஆர். காந்தி தெரிவித்துள்ளார்.

மருதங்கோடு ஆலம்பாடி ஸ்ரீகிருஷ்ண வித்யாலய பள்ளியில் கம்பியூட்டர் ஆய்வகம் திறப்பு மற்றும் இயற்கையை பாதுகாக்கும் வகையில் மரம் நடுதல் ஆகிய நிகழ்வுகளை நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக எம்எல்ஏ எம்.ஆர் காந்தி துவக்கி வைத்தார்.

அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது :- இந்து ஆலயங்கள் , இந்து கடவுளை வணங்காதவர்கள், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வைத்து திராவிட முன்னேற்ற கழக அரசு அறநிலைய துறை மூலம் கோயில்களில் நிகழ்ச்சிகளை துவங்கி வைப்பது உட்பட பல செயல்களை செயல்படுத்தி வருகிறது.

இது வருந்த தகுந்த செயலாக உள்ளது. இப்படிபட்ட நிகழ்வுகள் நடக்காமல் பார்த்து கொள்ள பாஜக கேட்டு கொள்கிறது. இந்து ஆலய நிகழ்ச்சிகளில் இந்து நம்பிக்கை, இறைநம்பிக்கை உள்ளவர்கள் கலந்து கொள்ள வேண்டும். அமைச்சர்கள் வந்துதான் கோயில் நிகழ்சிகள் துவங்க வேண்டும் என்றால், இந்து அமைச்சர்களை அனுப்பினால் பாஜக வரவேற்கும்.அதற்கு அறநிலைய துறை தயார்படுத்தி கொள்ள வேண்டும். தமிழகத்தில் அதிக இந்து அமைச்சர்கள் உள்ளனர், என்று கூறினார்.

Views: - 1162

0

0